உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்மபூஷன் பத்மறி ஆயிற்று - 423 புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியாரும் அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தனர். அம் மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நாலா பக்கங்களிலும் உயர் நிலைப் பள்ளிகள் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. கேலு எராடி இ ஆயத் - ரங்க வடிவேலு உயர்நிலைப் பள்ளி தொடங்க, ஊரார், அய்ந்து ஏக்கர் நிலம், பத்து அறைகள் கொண்ட கட்டடம், மூன்றாண்டு நிகரச் செலவிற்காக எட்டாயிரத்து இருநூறு ரூபாய்கள் கொடுக்க வேண்டும். அவற்றைக் கொடுத்தால், மாவட்ட ஆட்சிக் குழு உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி நடத்தும். அந்நிலைப் பள்ளிகளை நடத்த உரிமம் கொடுப்பது யார்? பொதுக்கல்வி இயக்குநர். 1960இல் மாவட்ட ஆட்சிக் குழுக்களைக் கலைத்துவிட்டு, அவற்றின் பொறுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்து இருந்தார்கள். அப்போதைய வடார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவர், திரு. கேலு ஏராடி, இ. ஆயத் என்பவர். அவரை ஆட்சித் தொண்டர் என்பதே பொருத்தம். பொது மக்கள் நலனுக்கே முன் உரிமை தந்த ஆட்சித் தலைவர்களில் அவர் முன்னணியில் இருந்தார் என்றால் மிகை அல்ல. ஒருமுறை, அவர் என்னைக் கண்ட போது, "ஆண்டுக்கு இத்தனை பள்ளிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று உச்சவரம்பு உண்டா?” என்று கேட்ட்ார். “இல்லை; இருக்கிற பள்ளிகளைக் கெடுக்கும் தொலைவில் இல்லாவிட்டால், அரசு ஆணைப்படி வசதிகளைச் செய்து தரும் எல்லா ஊர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி கொடுக்க முடியும்” என்றேன். s உடனே, அவர், தமது அருகிலிருந்த, தனி அலுவலர், திரு. ரங்க வடிவேலுவைக் கூப்பிட்டு, 'இயக்குநர் நல்ல எண்ணத்தைப் பயன்படுத்திக்கொண்டு எவ்வளவு அதிகமான உயர்நிலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/462&oldid=788267" இலிருந்து மீள்விக்கப்பட்டது