பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 நினைவு அலைகள் எல்லா மாவட்டத் தவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர். எனவே, உணவுப் பொருள்கள் வாங்குதலைச் செம்மையாகக் கவனிக்க, அவரால் முடிந்தது. அவர் அய்ந்தாண்டுகளுக்குமேல் அப் பொறுப்பில் இருந்தார். எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்கவில்லை அவரைப் பின்பற்றி, ஆசிரியர்கள் உட்பட அனைவரும் விழிப்பாக இருந்து நல்ல பெயர் பெற்றுத் தந்தார்கள். "கேர் வந்தபோது, இயக்ககத்திற்கு ஒரு ஜீப்வேன் கொடுக்கப்பட்டது. அதுவும் பகல் உணவுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கேர் நிறுவனத்தின் சார்பில் நான்கு இந்தியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். நம் அலுவலர்களைவிட அவர்கள் அதிக ஊதியம் பெற்றார் கள். தனி அலுவலருக்கு நாள் பயணப்படி ரூபாய் 5.25. கேர்’ மேற்பார்வையாளருக்கு ரூபாய் 25. பயணப்படி இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, பணிபுரிந்த நல்ல தொண்டர்களுக்கு எப்படி நன்றி கூறுவது? குடியரசுத் தலைவரின் வருகையால் வேலூர் பள்ளிச் சீரன்மைப்பு மாநாடு, நாடு முழுவதிலும் விளம்பரமாயிற்று. அப் புதுமை பற்றியே எங்கும் பேச்சு. --- = ‘விளம்பரம் சரி, பொது மக்களுக்கு என்ன நன்மை? என்ற கேள்வியை என்க்கு நானே கேட்டுக் கொண்டேன். சில திங்களில் அதற்குப் பதில் வந்தது. கல்வி வளர்ச்சியில் முன்னே இராத - அம் மாவட்ட மக்களிடையே, முன்னர்க் காணாத-கல்வியார்வம், ஊற்றெடுத்தது. ஈத்துவக்கும் இன்பம் கேடில் விழுச் செல்வமாம் கல்வி பற்றியே பாமரர் முதல் புலவர்வரை ப்ேசத் தலைப்பட்டனர். கடலூரில் பணிபுரிந்து வந்த, மா. அரங்கநாதன் என்னும் ஆசிரியர், பெரும் புலவர் வேங்கடசாமி நாட்டாரிடம் தமிழ் கற்றவர். அவர் பகல் உணவு, சீருடை, பள்ளிச் சீரமைப்பு நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு. ஈத்துவக்கும் இன்பம்’ என்னும் நல்ல கவிதை நூலை யாத்தார். o --- --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/461&oldid=788266" இலிருந்து மீள்விக்கப்பட்டது