உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்மபூஷன் பத்மறி ஆயிற்று 421 “இந்த விவகாரத்தில் இலாப நஷ்டத்தை மட்டுமே கவனிக்காதீர்கள். "பன்னாட்டுப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனத்தின் மூலம் உங்கள் நிறுவனத்தின் திறமை உலகப்புகழ் பெறும் அமெரிக்கர் மெச்சும் இந்திய நிறுவனமாக விளங்கவேண்டும்” என்றேன். திரு. கிருஷ்ணா, பெருந்தன்மையோடு, தயக்கமின்றிக் கட்டண விகிதத்தைக் குறைத்துக் கொண்டார். - அதற்கு, அடிப்படையில், உடன்படிக்கை செய்து கொண்டோம்; அது, பல்லாண்டு காலம், ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அந் நிறுவனத்திற்கே உரிய தனித் திறமையோடு, பொருள்களை, நேரத்திலும் சரியாகவும் கொண்டு சேர்த்தார்கள். 1961 ஆகஸ்ட் முதல், அமெரிக்க உணவு உதவியைப் பெற்று வந்தோம். மூன்றாண்டு காலம் திங்களுக்கு இரண்டு நாள்களுக்கான பொருள்களை மட்டும் பெற்று வந்தோம். பிற்காலத்தில் அது "தோட்டத்தில் பாதி கிணறு என்கிற அளவு விரிவடைந்து விட்டது. கால்பிரெய்த் முதல் முறை அந்தப் பண்டங்கள் சென்னைக்கு வந்து சேர்ந்த போது, அமெரிக்கத் துரதர் திரு. கால்பிரெய்த் தில்லியிலிருந்து வந்து, முதல் சரக்கை, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியத்திடம் அளித்தார் 1956இல் மக்கள் இயக்கமாகத் தொடங்கியபோதோ, 1957 நவம்பர் முதல் அரசின் திட்டமாக மாறியபோதோ, பின்னர் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளாக வளர்ந்தபோதோ இவற்றைக் கவனித்துக் கொள்ளப் பொதுக்கல்வி இயக்ககத்திற்கு என்று, காரோ பிற வாகனமோ கிடையாது. 1961இல் கேர்’ உதவி பெற்றபோது, தனி அலுவலர் நியமிக்கப்பட்டார். அப் பதவியை ஏற்றுக்கொண்ட திரு. எஸ். வடிவேலு பிள்ளை, கல்வித்துறையில் பழுத்த பட்டறிவு பெற்றவர். எப் பதவியில் இருப்பினும் அதற்குப் பெருமை சேர்த்தவர்; நாணயமானவர்; இனிய பண்பினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/460&oldid=788265" இலிருந்து மீள்விக்கப்பட்டது