உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 நினைவு அலைகள் திட்டம் தயாரித்தேன் உடன்ே, ஆலோசனையில் இறங்கினேன். மூத்த அலுவலர் களோடு பேசியபின், முழுமையான திட்டத்தைக் கொடுத்தேன். சென்னைக்கு வந்து சேரும் அமெரிக்க உணவுப் பொருள் களைத் தலைநகரிலேயே கிடங்குகளில் பத்திரப்படுத்தி வைப்பது. திங்கள் தோறும், அந்தந்தச் சரகத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கணக்கிட்டு, பள்ளிக்கூட ஆய்வாளர் அலுவலகத் திற்கு அனுப்பி வைப்பது. அந்தந்த மதிய உணவு மையத்தின் சார்பில் ஒர் ஆசிரியர், குறிப்பிட்ட நாளன்று ஆய்வாளர் அலுவலகம் சென்று பொருள் களை வாங்கிச் செல்வார். அதற்கான செலவு நியாயமான செலவாகும். இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து, கேர் உணவுப் பொருள்களை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு எப்படி அனுப்பி வைப்பது? சரக்குப் பேருந்துகள் மூலம் அனுப்ப அரசு முடிவு எடுத்தது. அதற்கான் டெண்டர்களைக் கேட்டு, தணிக்கை செய்து, பரிந்துரை வழங்கும்படி ஆணையிடப்பட்டேன். அப்படியே டெண்டர்கள் வரவழைக்கப்பட்டன. அய்ந்தாறு சரக்குப் பேருந்து நிறுவனங்கள், அவை போகக்கூடிய ஊர்களையும் கட்டணத்தையும் அறிவித்தார்க்ள். மதுரை, டி. வி. எஸ். நிறுவனம் மட்டுமே நாங்கள் கேட்ட ஊர்களுக்கெல்லாம் போகும் நிலையில் இருந்தது. எல்லா ஊர்களுக்கும் போகும் டி. வி. எஸ்.சுக்குக் கொடுப்பது. சீராக நடப்பதற்கு வழியாகும். அவர்கள் கட்டண விகிதம் அதிகம் என்று சொல்ல முடியாது. இருப்பினும் அதைக் குறைத்துக் கொள்ளும்படி பேரம் பேச நினைத்தேன். திரு. கே. வேங்கட சுப்பிரமணியத்திடம் அப் பொறுப்பை விட்டேன். டி. வி. எஸ். கிருஷ்ணா அப்போது குற்றாலத்தில் இருந்தார். முன்னவர் அங்குச் சென்றார்; பின்னவரோடு பேசினார். கிருஷ்ணாவே, என்னோடு தொலைபேசியில் பேசும்படி செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/459&oldid=788263" இலிருந்து மீள்விக்கப்பட்டது