பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uğrbestü uğunn5 e ulüm 425 அவரும் என்னைப் பாராட்டினார். எல்லாப் பகுதிகளிலும் அத்தகைய சீரமைப்பு மாநாடுகளை நடத்தி, எழுச்சி யூட்டி, மக்களைக் கல்வி வளர்ச்சியில் ஈடுபடுத்தச் சொன்னார். அடுத்து, தொண்டருக்கு விருது "பகல் உணவுத் திட்டம், பள்ளிச் சீரமைப்புப் பணி ஆகியவற்றில் சிறந்த பணியாற்றிய எவருக்காவது விருது அளிக்கும்படி, பரிந்து வைக்கலாமா?” என்று என்னிடம் கேட்டார். “ஒருவருக்கு மட்டும் கொடுப்பதானால், திரு. முகமதுகளிைக்கும், இருவருக்குக் கொடுக்கலாம் என்றால் திரு. சு. ராஜத்திற்கும் கொடுக்கலாம்” என்றேன். அமைச்சர் வாய் திறக்கவில்லை. “அலுவலர் அல்லாதாருக்குக் கொடுப்பதனால், காஞ்சிபுரம் ஏ. கே. தங்கவேலருக்கும் அடுத்து வடார்க்காடு திருப்பத்துார் இராகவ முதலியாருக்கும் கொடுக்கலாம்” என்றேன். அதற்கும் அமைச்சர் மெளனம் சாதித்தார். பத்மபூஷண் - பத்மபூரீ ஆயிற்று சில நாள்கள் சென்றன. அமைச்சர் பக்தவத்சலனாரின் மூத்த மைத்துனர், திரு தி. கோ. பாலசுப்பிரமணியம் என் அலுவலகம் வந்தார். எதற்கும் எவருக்கும் பரிந்துரை கொண்டுவரவில்லை. தகவலோடு வந்தார். என்ன தகவல்? “தில்லிக்குத் திரும்பிய குடியரசுத் தலைவர், நம் முதலமைச்சர் காமராசருக்கு நேர்முகக் கடிதம் ஒன்று எழுதினார். அதில் பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தைப் பாராட்டினார்; தொடர்ந்து நடத்தச் சொன்னார். “இப்படியொரு புதுமையை மக்களிடம் பரப்பி, மக்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக நடத்தி வரும் இயக்குநருக்கு இவ்வளவு காலம் எவ்வித விருதும் வழங்காதது வியப்பாக இருக்கிறது. “வேறு காரணங்களுக்காகச் சென்னை மாகாண அரசுக்கு அவர்பேரில் மனக்குறை யில்லாவிட்டால், அடுத்து வரும் குடியரசு நாளன்று அவருக்கு விருது வழங்கலாம்.என்ன விருது என்று மாநில அரசு முடிவு செய்து பரிந்துரைக்கலாம்” என்று குடியரசுத் தலைவர் எழுதி இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/464&oldid=788269" இலிருந்து மீள்விக்கப்பட்டது