பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 நினைவு அலைகள் 'ஆணைக்காக’ என்று எல்லோரும் குறிப்பு எழுதி, முதலமைச்சருக்குக் கோப்பை அனுப்பினார்கள். முதலமைச்சர், தன் கைப்பட ‘பத்மபூஷன் விருது அளிக்கலாமென்று எழுதிக் கையெழுத்திட்டார். அப் பரிந்துரை, தில்லிக்குப் போய் விட்டது. இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டார். சில நாள்களுக்குப்பின், செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சியில் அமைச்சர் பக்தவத்சலனாரோடு நானும் கலந்து கொண்டேன். மேற்கூறிய செய்தியை அமைச்சரும் என் காதில் போட்டார். சில நாள்களுக்குப் பிறகு, அரசு செயலகத்தில் ஒருவர் அது பற்றிய கோப்பை எனக்குக் காட்டினார். இவ்வளவிற்குப் பின், இ. ஆ. ப. அலுவலர் ஒருவர் எனக்கு அளிக்க நினைக்கும் விருதின் நிலையைக் குறைக்க முயன்ற போது, அதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நேர்ந்தது. ஆனால், எனக்கு வரவிருப்பதை தக்கவைத்துக் கொள்ள முயலவில்லை. s - ஆம். 'விட்டுக் கொடுக்காதவர்” என்ற பெயர் பெற்ற எனக்கு, எனது தனிப்பட்ட பெருமையைப் பெரிதாகவே காத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றவில்லை. நான், கருத்துகள்-கோட்பாடுகள்-முதலியவற்றை விட்டுக் கொடுக்காதவன்தான். அவற்றிற்காகத் தேவைப்பட்டபோது வலிவோடு வாதாடி யவனே. அவ் வலிமைக்கு வேர் எது? -- பெரியவர்களிடம் இதையும் அதையும் கேட்டு வாங்கி, தாட்சண்யப்பட்டு விடாமையால் வந்தது. 'தன்னலச் சிந்தனை, புற்றுநோய் போலப் பரவிவிடும் தன்மையது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. என்று எண்ணி வாளாவிருந்து விட்டேன். சதி வெற்றி பெற்றது. எனக்கு வரவிருந்த, 'பத்மபூஷன்’ விருது, 'பத்மபூரீ யாகக் குறைந்து விட்டது. அந்தத் தீமை என்னைக் கெடுக்கவில்லை! என் போக்கில் வறுமையைச் சேர்த்துவிடவில்லை! என் சிந்தனையில் சிறுமையைக் கலக்கவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/465&oldid=788270" இலிருந்து மீள்விக்கப்பட்டது