பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நினைவு அலைகள் அதனால், பல்லாயிரம் கோடி பணம் மிஞ்சும். அது ஆக்க வேலைகளுக்குப் பயன்படும். ஆக்கப் பணிகளில் ஒன்றான கல்வி வளர்ச்சிக்கும் நல்ல காலம் பிறக்கும் என்று அவர், ஆருடம் கூறினார். உலகில் பல அறிஞர்கள் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள். ஆட்சித் தலைவர்கள், மனித இனத்தைக் காப்பதைவிட, அழிக்கும் சக்தியைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்பைக் காட்டுகிறார்கள். பட்டினியால் மடியும் கோடிக்கணக்கானவர்களைக் காப்பாற்ற வேண்டிய நிதி, பேரழிவுப் போர்க் கருவிகளாக முடக்கப்படுகிறது. கண் திறந்து எழுத்தறிவு கொடுக்கப் பயன்படாமல், உலகத்தையே செந்தூரமாக்கும் அவலங்களுக்குப் பயன்படுகிறது. 'படைக்குறைப்பு பற்றி இன்றும் பேசப்படுகிறது; பயன் உள்ள நடவடிக்கை காற்றில் மிதக்கிறது. அது அமைதி மழையாகப் பெய்து, மானுடத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எல்லா நாடுகளிலும் கோடிக்கணக்கானவர்கள், குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். மேற்படி எதிர்பார்ப்பை 1961ஆம் ஆண்டு சனவரித் திங்கள் புது தில்லியில் கூடிய-நான் தலைமை தாங்கிய ஆசியக் கல்வித் திட்ட மாநாட்டிலும் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா வெளியிட்டார். அது பலிக்காதது அவருடைய பிழை அல்ல. தமிழ் மாநிலம் தழுவிய, பொது மக்களின் ஈடுபாட்டால் நடந்த பகல் உணவுத் திட்டம், இலவசச் சீருடை வழங்கும் நடவடிக்கைகள், பள்ளிச் சீரமைப்பு இயக்கம் முதலியன அன்றைய உலகத்திற்கோர் புதுமை. புதிய அணுகுமுறை, புதிய பாடத் திட்டம். புதிய பயிற்று முறை ஆகியவை பற்றி, யுனெஸ்கோ கவனித்து, நூல்கள் வெளியிடுவது வழக்கம். யுனெஸ்கோ பாராட்டு அதையொட்டி, கல்வியில் புதுமைகள் யாத்தல்' என்ற தலைப்பில் 1974ஆம் ஆண்டு ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதில் மேற்படி சென்னை மாகாண நடவடிக்கைகள், அவற்றின் நோக்கம், வெற்றி முதலியன படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/467&oldid=788272" இலிருந்து மீள்விக்கப்பட்டது