உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்மபூவின் பத்மறி ஆயிற்று 429 அந் நூலை யுனெஸ்கோவின் சார்பில் எழுதியவர் வேடிக்கை பார்க்க வந்த வெளிநாட்டவர் அல்லர். மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வி இயக்குநராக விளங்கியபல்லாண்டு பட்டறிவு பெற்ற - டாக்டர் சித்ரா நாயக் என்னும் அம்மையார் ஆவார். அவரது கணவரான மறைந்த டாக்டர் ஜே. பி. நாயக் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கல்வியாளர் ஆவார். அவர், இந்தியக் கல்வி அமைச்சகத்தில் பல்லாண்டுகள் ஆலோசகராகத் தொண்டு புரிந்துள்ளார்; என்பால் பாசம் கொண்ட நண்பர். தலைமை ஆசிரியர் சாமிநாதன் தொண்டு ஒரு விடுமுறை நாள்: நான் சென்னையில் ஒய்வாக இருந்தேன். காலை 11 மணிக்கு, கிளியனுார் வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், என் இல்லத்திற்கு வந்தார். உயர்நிலைப் பள்ளிகள் தொடங்குவது, பகல் உணவு மையங்களைத் தொடங்குவது பற்றி உரையாடினார். பிறகு, 'நான் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் இருந்து செனாய் நகருக்குத் திரும்புகையில், கார் நின்று, திரும்ப நேரிட்டது. 'அவ்வேளை நாட்டுப்புற இளைஞன் ஒருவன், என் காரண்டை வந்து, ஒரு கடிதத்தைக் காட்டினான். 'அதன் மேல், உங்கள் முகவரி இருந்தது. அதைக் கண்டதும் அவர் வீட்டிற்குத்தான் போகிறேன். காரில் ஏறிக்கொள்; அவரிடம் கொண்டு போய் விடுகிறேன்” என்றேன். 'அவ் விளைஞன். அச்சப்பட்டான். கொங்கு நாட்டு அச்சு முழுமையாக இருந்தது. அவனைச் சமாதானப்படுத்திக் காரில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளேன். “என் காரில் இருக்கும் அவனைக் கூப்பிடட்டுமா?” என்றார். “அவன் எதற்காக, அக் கடிதத்தோடு வந்துள்ளான் என்பதை நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். பேச்சு நாட்டுப் புறச்சாயலில் இருக்கும்; பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் வெங்கடகிருஷ்ண ரெட்டியார். "அவனைப் பார்த்துக் கேட்போம்” என்றேன். ரெட்டியார், வெளியே, அவனை அழைத்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/468&oldid=788273" இலிருந்து மீள்விக்கப்பட்டது