உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13s) நினைவு அலைகள் “என்னப்பா! நீ எந்த ஊர்? எதற்காக என்னைத் தேடி - = ~ ** i |வந்திருக்கிறாய்?” என்று கேட்டேன். “எசமான் அய்யா, எனக்கு ஒன்றும் தெரியாது. நான் வெள்ளக்கோவில், உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி படிப்பு முடித்தேன். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேரலாமென்று, உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று, என் மதிப்பெண்ணையும், நற்சான்றிதழையும் கேட்டேன். “தலைமையாசிரியர் எசமான், என் மதிப்பெண்னைப் பார்த்தார். “நான் எதிர்பார்த்தபடி, அறுநூறுக்கு அய்ந்நூற்று இருபத்தேழு வாங்கியிருக்கிறாய். இது கொள்ளை மதிப்பெண். இவ்வளவு வாங்கின நீ, கல்லூரியில் சேர்ந்து படிக்கலாமே. பயிற்சிப் பள்ளிக்குப் போகக்கூடாது” என்றார். “என் குடும்பம், பருத்தியிலிருந்து கொட்டை எடுத்து, நாளைக்கு முக்கால் ரூபாய் சம்பாதித்துப் பிழைக்கிறது. கல்லூரியில் சேர, எங்களுக்கு ஏதுங்க பணம்” என்றேன். “தலைமையாசிரியர், ஒன்றும் பேசவில்லை. மளமளவென்று, ஒரு கடிதத்தை எழுதினார். அதை உரையில் போட்டு முகவரி எழுதினார். "இதை எடுத்துக்கொண்டு சென்னைக்குப்போ அதற்கு, ஈரோடுவரை பஸ்ஸில் போ. அங்கு, நீ இறங்கி வண்டி ஏறி சென்னைக்குப் போ. “சென்னை சென்டிரல் நிலையத்தில் இறங்கி, வெளியே வா. அமைந்தகரைக்குப் போகும் 15ஆம் எண் பஸ் எங்கே நிற்குமென்று கேள். யாரும் காட்டுவார்கள். “அதில் ஏறி, அது போய்ச்சேரும் முனை வரை செல். அங்கு, செனாய்நகர் எங்கே என்று கேள். பக்கத்தில் உள்ளவர்கள் அதைக் காட்டுவார்கள். "இயக்குநர் வீடு எது, என்று கேள். வழி சொல்லுவார்கள். அவரிடம் இக் கடிதத்தைக் கொடு. அப்புறம் அவர் சொல்லுகிறபடி” என்றார். ங்ங் நான் வெளியூர் செல்லக் காசு இல்லை, அய்யா! ஈரோடு போய்க்கூட பழக்கம் இல்லை' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/469&oldid=788274" இலிருந்து மீள்விக்கப்பட்டது