உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uğmb° uğun5 ayuntüm 431 “மேசையைத் திறந்து, பணம் எடுத்துக் கொடுத்தார். பள்ளி ஊழியரிடம் சொல்லி, பஸ் ஏற்றிவிட்டார். அவர் அன்று சென்னைக்கு வந்த ஒருவரோடு அறிமுகம் செய்து வைத்தார். 'எசமான் பேச்சை மறுக்க முடியாமல், இங்கு வந்திருக்கிறேன். இக் கடிதத்தைப் பாருங்கள். என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரியும்” என்றார். கடிதத்தைப் பெற்றுப் படித்துப் பார்த்தேன். ஒரே முறை என்னைக் கண்டுள்ள, தலைமையாசிரியர், சாமிநாதன் உரிமையோடு எழுதியிருந்தார். 'நூற்றுக்கு எண்பத்தெட்டு விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ள இவ் விளைஞன், உயர் படிப்புப் படிக்காமல் போனால் அது நம் நாட்டுக்குப் பேரிழப்பாகும். உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால், எப்படியாவது உதவுவீர்களென்று உரிமை கொண்டாடுவதற்காக மன்னிக்கவும் - இவனது உயர் கல்விக்கு வேண்டியவற்றைச் செய்து உதவுங்கள்’ என்று எழுதியிருந்தார். நொடியும் தாமதியாமல், தொலைபேசியிடம் சென்றேன். இலயோலா கல்லூரி முதல்வரோடு தொடர்பு கொண்டேன். இளைஞரின் மதிப்பெண்ணைச் சொன்னதும், “அனுப்பி வையுங்கள். முதல் பட்டியலிலேயே சேர்த்து விடுகிறேன்” என்றார். 'நன்றி. அப் பையன் சம்பளம் கட்ட இயலாது. ஆனால், அரசின் உதவிப்பணம் அவருக்குக் கிடைப்பது உறுதி. அதற்கு நான்கு திங்களாவது காத்து இருக்க நேரிடும். “இப்போது, கல்விக் கட்டணம் கேட்காமல், சேர்த்துக் கொள்ளுங்கள். "அதேபோல், விடுதிக் கட்டணம் கேட்காமல் விடுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். “உதவித் தொகை வராவிட்டால், செலவை ஏற்றுக் கொள்ளுகிறேன்.” அக் காலத்தில் விடுதிச்செலவு திங்களுக்கு நாற்பது, அய்ம்பதற்குமேல் இல்லை. அத் துணிச்சலில் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கல்லூரி முதல்வர் இசைந்தார் மாணவரின் பெயரைக் குறித்துக்கொண்டார். இந்த நல்ல செய்தியைக் கேட்டு, மாணவர் மிரண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/470&oldid=788276" இலிருந்து மீள்விக்கப்பட்டது