உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 நினைவு அலைகள் “எவ்வளவு பனம் ஆகுமோ! அதை எல்லாம் எப்படித் திருப்பிக் கொடுப்பேன். துணிமணிக்கு, பாட நூல்களுக்கு என்ன செய்வேன்” என்று தழதழத்தான். o "எதையும் திருப்பித்தரத் தேவையில்லை” என்று நான் தொடங்கியதை, திரு ரெட்டியார் முடித்து வைத்தார். o “இப்போது நான் உன்னை என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன். வழியில் துணிக்கடைக்குச் சென்று வேட்டி சொக்காய் வாங்கித் தருகிறேன். “பாட நூல்களும் நானே வாங்கித் தருகிறேன். நன்றாகப் படிப்பது ஒன்றுதான் உன் பொறுப்பு” என்றார். கிளியனுரர் வெங்கடகிருஷ்ண ரெட்டியார், நற்குடித் தோன்றல்; ஆங்கிலம் கற்றவர்; நாட்டுப் பற்றாளர். இந்திய விடுதலை இயக்கமாகிய தேசிய காங்கிரசில் வாழ்நாள் முழுவதும் தொண்டு ஆற்றி, தென்னார்க்காடு மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஈடுபட்டு, காங்கிரசுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தவர். மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பணியாற்ற, நூலக இயக்ககதிற்குத் துணை நின்றவர். அவர் சொன்னபடி செய்தார். கொங்கு நாட்டு மாணவரை அழைத்துப்போய், துணிமணிகள், வாங்கித்தந்து, தம்மோடு வைத்திருந்தார். அடுத்த நாள் இலயோலா கல்லூரிக்கு அழைத்துப்போய் உடன் இருந்து சேர்த்துவிட்டார். பாடநூல்கள், எழுது பொருள்கள் முதலியன வாங்கித் தந்தார். மானவர் விடுதியில் சேரும்போது, கைச்செலவுக்கும் கொடுத்துதவினார். எதிர்பார்த்த அரசு உதவிப் பணம் கிடைத்தது. அவ் விளைஞர், கல்வியே சிந்தனையாக இருந்து நல்ல வண்ணம் தேர்ச்சி பெற்றார்; பொறியியற் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். சென்னை இந்திய தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில், பரிந்துரையின்றி இடம்பிடித்துக் கொண்டார். “டாக்டர் (ஆய்வுப்) பட்டம் பெற்ற பின், பல்லாண்டுகளாக, அமெரிக்காவில் பணிபுரிகிறார்; நிறைய சம்பாதிக்கிறார். அப் பசுமை நாட்டுக்குப் பயன்பட்டிருந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/471&oldid=788277" இலிருந்து மீள்விக்கப்பட்டது