பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 நினைவு அலைகள் †† உடைய நான் அந்த மாநாட்டில் பங்குகொள்ள இயலாது” என்று அவர் மறுத்துவிட்டார். 'நன்கொடையாளர் என்ற முறையில் தாங்கள் ஒரு நாற்காலிக்கு ஆணையிட்டால், கடைக்காரர். சில வேளை அடக்க விலைக்கே கொடுக்கலாம். “மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர் என்கிற முறையில், தாங்கள் ஆயிரக்கணக்கான நாற்காலிகளை வாங்கும்போது, அத்தகைய தாட்சண்யம் இராது. எவ்வளவு அதிக விலை சொல்ல முடியுமோ அவ்வளவு அதிக விலை சொல்லுவார்கள். “ஒப்பந்தப் புள்ளி விலைகளில் குறைந்ததை ஏற்றுக் கொண்டாலும், அது தனி மனிதன் கொடுக்கும் விலையைவிட, இரண்டு மூன்று பங்கு இருக்கும். மொத்தத்தில் தளவாடங்கள் வாங்கிக் கொடுப்பதற்குச் சுண்டைக்காய் கால்பனம், சுமை கூலி முக்கால் பணம்’ என்று ஆகிவிடும். "வரிப்பணத்தைக் கொண்டு செய்வதானால் ஒருதலை முறைக்குப் பள்ளிகளின் குறைபாடுகளைப் போக்குவதற்குத்தான் பொது நிதி முழுதும் செலவாகிவிடும்” என்று துரது சென்றவர்கள் பணிவோடு விளக்கினார்கள். அவர் இசைய மறுத்துவிட்டார். மாநாடு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்றியே, நடக்க நேரிட்டது. எனினும் களைகட்டி யிருந்தது. மாநாட்டில் கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. சுப்பிரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஒ. வி. அளகேசன், கல்வி இயக்குநராகிய நான், மற்றும் அக்கம் பக்கத்திலிருந்த பெரியோர்களும் கலந்து கொண்டோம். கல்வி அமைச்சர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். நாட்டுப் புறப்பகுதியில் கல்வி மேம்பாடு பற்றி அவ்வளவு ஆர்வமும் ஆதரவும் இருப்பது குறித்துச் சொல்லொணா மகிழ்ச்சி கொண்டார். பாராட்ட வேண்டியவர்களை எல்லாம் பாராட்டிவிட்டு, "இன்னும் ஒன்று செய்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும், இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு வி. கே. இராமசாமி முதலியாருக்கும் மாநாட்டில் சிறப்பான பங்கு கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். கல்வித்துறை, குறிப்பாக ஆசிரியர்கள் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/473&oldid=788279" இலிருந்து மீள்விக்கப்பட்டது