உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 435 நல்ல எண்ணத்தை வளர்ப்பதற்கு முயல வேண்டும். இனிமேல் பிற இடங்களில் நடக்கவிருக்கும் மாநாடுகளில் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்று புதிய பொறுப்பைக் கொடுத்தார். அவ் வறிவுரை பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அவர்களுக்கு நடந்தது தெரியும். அவர்கள் பதில் சொல்ல முடியாது. ஆனால், மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நான் வம்பில் மாட்டிக் கொண்டேன். அப் பள்ளிகளிலுள்ள தொடர் குறைகள், அவற்றைப் போக்கத் தேவைப்படும் மலையளவு நிதி, அவற்றில் ஒர் அளவாவது பொது மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறுவதால் பொது மக்கள் பள்ளிகளின்மேல் அக்கறை காட்டக்கூடும் - என்பதை எல்லாம் அமைதியாக விளக்கினேன். பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தின் உட்பொருள், தேவை முதலியவற்றை விரிவாக எடுத்துச் சொன்னேன். “மாநாட்டு அமைப்பாளர்கள் இரண்டு மூன்றுமுறை திரு. வி. கே. இராமசாமி முதலியாரை அணுகிக் கேட்டுப் பார்த்தார்கள். “வேண்டியவர்களைக் கொண்டு பரிந்துரைக்கச் சொன்னார் கள். எதுவும் பலிக்கவில்லை. “சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நடக்கவேண்டிய நல்ல நடவடிக்கைகளைக் கைவிட்டு விடக் கூடாது என்று அவர் பங்கு கொள்ளாத போதிலும் இம் மாநாட்டை நடத்தி விட்டார்கள். “ஆசிரியர்கள் கல்விப் பணிக்குப் பயிற்சி பெற்றவர்களே ஒழிய, துரதர் அணிக்குப் பயிற்சி பெற்றவர்களல்லர். “தமிழ்நாட்டுக் கல்வித் துறையைப் பொறுத்த அளவிலே ஆளுங்கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் என்றும் வேறுபாடு காட்டுவதில்லை. “இந்த ஆசிரியர்கள் எந்தக் கட்சியினரையும் புறக்கணிப்ப தில்லை. “பகல் உணவு, சீருடை, பள்ளிச் சீரமைப்பு போன்ற பொது நன்மைகளுக்கு எல்லாக் கட்சிக்காரர்களையும் அணுகிக்கேட்டு வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/474&oldid=788280" இலிருந்து மீள்விக்கப்பட்டது