பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 நினைவு அலைகள் "பல கட்சிக்காரர்களின் உதவிகளையும் பெற்று வருகிறார்கள். இந்த அளவு நடுநிலைமையை வெற்றிகரமாகக் காப்பாற்றிக் கொண்டால் போதும். “அதற்குமேல் சென்று உறவுப்பகையையோ கட்சிப் பகையையோ தீர்த்து வைக்கும் பொறுப்பை மேற்கொண்டால், அது அவர்களை எங்கோ கொண்டுபோய்த் தள்ளிவிடும். "அரசியல் போட்டிகளுக்கு இடையில் ஆசிரியர்களைத் தள்ளிவிட வேண்டாம் என்று மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை அடக்கத்தோடு, கடமை பற்றி வேண்டிக் கொள்கிறேன்” என்று முடித்தேன். அமைச்சர் சினம் கொள்ளவில்லை. தமக்குக் குறுக்கே சொன்னதாகக் கருதவில்லை. நீங்கள் சொல்லுவதும் சரிதான்” என்று கூறி, அதோடு விட்டு விட்டார். கராச்சி மாநாடு உள்ளூர் மாநாடுகள் இப்படி நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், அண்டம் அளாவிய மாநாடு ஒன்று அமைதியாக நடந்ததைச் சொல்ல வேண்டும். யுனெஸ்கோ என்னும் நிறுவனத்தைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளேன். 1960ஆம் ஆண்டு இறுதியில் அந் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 'ஆசிய நாடுகளுக்கான தொடக்கக் கல்வி மாநாட்டைக் கூட்டிற்று. இந்தியாவிலிருந்து நால்வர் அடங்கிய துதுக்குழுவை அனுப்பச் சொல்லிற்று. மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக விளங்கும் மேதகு சங்கர் தயாள் சர்மா, அப்போது மத்தியப் பிரதேசத்தின் கல்வி அமைச்சராக விளங்கினார். அவரது தலைமையில் இந்தியக் கல்வி அமைச்சகத்தின் துணைச்செயலர் டாக்டர் பி. டி. சுக்ளா, ஒரிசா மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநர் டாக்டர் தாஸ், சென்னை மாநிலப் பொதுக்கல்வி இயக்குநராகிய நான்-ஆகியோர் மாநாட்டுக்குச் சென்றோம். # கராச்சிக்குப் போகிறோமே, நகர நிலவரம் எப்படி இருக்குமோ என்று உள்ளுர அச்சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/475&oldid=788281" இலிருந்து மீள்விக்கப்பட்டது