உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 437 --- அங்கு இராணுவ ஆட்சி ஏற்பட்டபின், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாகவும் பொது மக்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து இல்லை என்றும் கேள்விப்பட்டு மனநிறைவு கொண்டோம். மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. மாநாடு நான்கு குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டது. ஒரு குழுவின் தலைவராக நான் இருக்கும் பேறு பெற்றேன். மாநாட்டின் பொதுக் கூட்டத்தில் டாக்டர் சர்மா தமிழ் நாட்டில் நடக்கும் புதிய கல்விப் புனைவுகளைப் பற்றி அறிமுகம் செய்தார். எனவே, என் குழுக் கூட்டத்தில் அவற்றைப்பற்றி விரிவாகப் பேசினோம். ஜப்பானைத் தவிர, பிற நாடுகளில் தொடக்கக் கல்விகூட. எல்லோருக்கும் எட்டவில்லை. அதற்கு முதற்காரணம், தொடக்கப் பள்ளிகள் துாரத்தில் இருப்பதாகும். ‘ஐந்து ஆறு வயதுப் பிள்ளைகள் பள்ளிக்கு நடந்து சென்று வீடு திரும்பும் வகையில் - அருகில் பள்ளிகளைத் தொடங்க வேண்டும்’ என்பது மாநாட்டு முடிவுகளில் ஒன்றாகும். சென்று வரக்கூடிய தூரம் எது? அது ஆங்காங்குள்ள நிலத்து இயல்பைப் பொறுத்தது. வயற்காட்டிலோ, மலைப்பகுதியிலோ ஒரு கல் துரம்கூடத் தொலைவாகத் தோன்றலாம். சாலை வழியில் போகக்கூடியதாக இருந்தால் அது தொலைவாக இராது. 'பள்ளிகள் அருகில் இருந்தாலும் எல்லோரும் வந்து சேருவது இல்லை. பள்ளிகளின் அகப்புறச் சூழலும் கவர்ச்சிகரமாக இருப்பின் பிள்ளைகள் ஏராளமாக வருவார்கள், தொடர்ந்து படிப்பார்கள்’ என்பது மாநாட்டின் கருத்து. ஆசிய நாடுகளில் பல வறுமையில் சிக்கி உள்ளன. ஏழைக் குழந்தைகள் வெளியில் ஒரு வேளை கஞ்சி கிடைத்தாலும், அதைத் தேடிச் சிற்றாள் வேலைக்குப் போய் விடுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/476&oldid=788282" இலிருந்து மீள்விக்கப்பட்டது