உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 நினைவு அலைகள் பள்ளிக்கூடம் போவதும் வேலைக்குப் போவதைப் போல ஆதாயமானதாக ஆக்க முயலுதல் நல்லது. அதை எப்படிச் செய்வது? பள்ளிகளில் ஒருவேளை உணவை வயிறார இலவசமாகக் கொடுத்தல் இரு இணைச் சீருடைகள் இலவசமாகக் கொடுத்தல்; பாட நூல்கள், எழுது பொருள்கள் முதலியவற்றையும் இலவசமாக வழங்குதல்; அவை பள்ளிக்கூடத்தில் தொடக்க நாள் முதல் கிடைக்கும்படி செய்தல். மேல் வகுப்புப் பிள்ளைகள், எளிய கைவினைகளைச் செய்தலும், அவற்றால் கிடைக்கும் ஆதாயத்தை மாணவர்களுக்கே பங்கு போட்டுக் கொடுத்தலும் பள்ளி வருகையை ஊக்குவிக்கும் என்பது மாநாட்டின் மற்றொரு கருத்தாகும். மேற்படி பரிந்துரைகள், பின்னர் வந்த மாநாடுகளுக்கு வித்தாக அமைந்த அளவிற்குப் பயிராகி அறுவடைக்கு வந்ததாகச் சொல்ல இயலாது. -- இன்னும் பல ஆசிய நாடுகள் எழுத்து அறியாமையில் தவிக்கின்றன. பத்மபூரீ விருது கிடைத்தது 1961ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் இருபத்தைந்தாம் நாள் இரவு ஏழு மணி அளவில் ஒரு தந்தி வந்தது. உடைத்துப் பார்த்தேன். பாராட்டு இருந்தது. எதற்காக? அவ் வாண்டு குடியரசு நாளைய சிறப்புகளில் எனக்குப் பத்மபூரீ பட்டம் வழங்கியுள்ளமைக்காகப் பாராட்டு. பாராட்டுத் தந்தி கொடுத்தவர் யார்? இந்திய அரசின் உள்துறைச் செயலர். “அவ்வளவு பெரியவர் பெயரில் வந்த தந்தியை நம்மால் ஒதுக்க முடியுமா?’ என்று என் மனைவி காந்தம்மாளிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் தொலைபேசி மணி அடித்தது. சென்னை நாளிதழ் ஒன்றின் நிருபர் ஒருவர் நான் மேற்படி விருது பெற்றதற்காக என்னைப் பாராட்டினார். செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/477&oldid=788283" இலிருந்து மீள்விக்கப்பட்டது