பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 439 அடுத்த நாள் காலை, சென்னைக் கடற்கரையில் நடந்த குடியரசு நாள் அணிவகுப்பிற்குச் சென்றேன். பலரும் பாராட்டினார்கள். முதல்வரின் வாழ்த்து முதல்நாள் இரவே பெரிய மாலைக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். அணிவகுப்பிற்குச் செல்லும்போது அதைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றேன். அணிவகுப்பு முடிந்ததும் அங்கிருந்து நேரே தியாகராயநகர் திருமலைப் பிள்ளை சாலைக்குச் சென்றேன். முதலமைச்சர் மாண்புமிகு காமராசரைக் கண்டு மாலை அணிவித்து நன்றி கூறினேன். முதலமைச்சர் உட்காரச் சொல்லி விட்டு வைரவனைக் கூப்பிட்டார். இரண்டு பேருக்கும் காப்பி கொண்டு வரச் சொன்னார். “உங்களுக்குத் தில்லியில் மட்டுமல்ல நல்ல பெயர். பிற மாநிலங்களிலும் உங்களைப் பாராட்டுகிறார்கள். உங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்களைத் தட்டிக்கொடுத்து நற்பணி புரியுங்கள்” என்று முதலமைச்சர் வாழ்த்தினார். இதற்கிடையில் தாழ்வாரத்தில் கூட்டம் திரண்டு விட்டது. வந்த காப்பியை விரைந்து குடித்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். அடுத்த நாள், கோவை நகரத்தில் எல்லாப் பள்ளிகளும் இணைந்து நடத்தும் ஒரு விழாவிற்கு ஒப்புக்கொண்டு இருந்தேன். எனவே, குடியரசு நாளன்று இரவே நீலகிரி விரைவு வண்டியில் கோவைக்குச் சென்றேன். ஈரோட்டில் மாபெரும் வரவேற்பு 27ஆம் தேதி இரவு, அதே நீலகிரி இரவு வண்டியில், கோவையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். இரவு ஒன்பது மணிபோல், வண்டி ஈரோடு வந்து அடைந்தது. பிளாட்பாரம் நிறைய மக்கள் வெள்ளத்தைக் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/478&oldid=788284" இலிருந்து மீள்விக்கப்பட்டது