பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 441 அவன், அத்தனை பேர் வந்து மாலை அணிவிப்பது கண்டு “அவர் யார்?' என்று கேட்டான். அவர் டைரக்டர்’ என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்திப் பையனுக்குப் பதில் கூறினார். இளைஞன் விடவில்லை. "எந்தப் படம் டைரக்ட் செய்திருக்கிறார்?’ என்று மீண்டும் கேட்டான். "படம் டைரக்ட் செய்யவில்லை. கல்வியை டைரக்ட் செய்கிறார்” என்று கூறியதைக் கேட்டு இளைஞனுக்குச் சப்பென்று இதை உடனிருந்த பெரியவரே என்னிடம் சொல்லி “நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது, பாருங்கள்?’ என்று வருந்தினார். பாராட்டுப் பெருவெள்ளம் நெ. து. சு. வுக்குப் பத்மபூரீ’ விருது அளித்தது என்ன உணர்ச்சியைக் கிளப்பிற்று? மகிழாதார் இல்லை’ என்பது தற்புகழ்ச்சி இல்லை. ஆசிரியர்கள் தாங்களே விருது பெற்றதுபோல் நிமிர்ந்து நின்றார்கள். மாணவர்கள் “எங்கள் ஐயாவுக்கு விருது” என்று. பூரித்தார்கள். பொது மக்கள்? “ஏழை - பாழைகளைப்பற்றி நினைக்கிறவரைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்கள். அவரைப் பாராட்டப் பாராட்ட நமக்கு வர்ற நன்மை அதிகமாகும்” என்று கள்ளங்கபடம் இல்லாமல் போற்றினார்கள். அம்மம்மா! எத்தனை பள்ளிகளில் பாராட்டு விழாக்கள்! ஒரே நிகழ்ச்சியில் எத்தனை பொன்னாடைகள்! மெய்யான பொன்னாடைகள் எண்ணற்றன. 'அரசு ஊழியர் பொது மக்களிடம் இருந்து நன்கொடை பெறக்கூடாது' என்பது கட்டுப்பாடு. அதைச் சொல்லிப் பொன்னாடைகளை விழாவிலேயே திருப்பிக் கொடுத்தால், ஊர்ப்பெரியவர்களும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் மனம் புண்பட்டு, பகலுணவு, சீருடை பள்ளிச் சீரமைப்பு, மேற்பார்வைப் படிப்பு, ஞானத்தந்தை திட்டம் ஆகியவற்றைக் கைவிட்டுவிடும் நிலை உருவாகுமோ என்று அஞ்சினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/480&oldid=788287" இலிருந்து மீள்விக்கப்பட்டது