உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 = நினைவு.அலைகள் பொன்னாடைகள் ஏலம் பொறுப்போடு சிந்தித்தேன். வழி ஒன்று தோன்றிற்று அதை மேற்கொண்டேன். விழாவில் சூட்டும் மலர் மாலைகளைக்கூட அங்கேயே ஏலம் போடுவது - அந்தப் பணத்தை ஏலம் எடுத்தவர் குறிப்பிடும் பள்ளியின் பகலுணவுத் திட்டத்திற்குக் கொடுப்பது; அதோடு ஏலம் எடுத்தவர்க்கு அம் மலர் மாலையையோ, பொன்னாடையையோ இயக்குநரே அணிவிப்பது- இம் முறைகளைப் பின்பற்றினேன். சிற்றுார், தொடக்கப் பள்ளிகளில் சில நூறு ரூபாய்கள் வந்தன. நகர-தொடக்கப் பள்ளிகளில் பல நூறு ரூபாய்கள் வந்தன. நகர உயர்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கிடைத்தன. சில பள்ளிகளில் எனக்குப் போர்த்திய பொன்னாடைகளைத் தலா ஐயாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர்களுமுண்டு: பல் பெயர்க்ள் ம்றந்துவிட்டன. மதுரை மாநகர் செளராஷ்டிரா உயர்நிலைப் பள்ளி விழாவில் எனக்குப் போர்த்திய பொன்னாடை ஐயாயிரத்து ஒரு ரூபாய்க்கு ஏலம் போனது நினைவுக்கு வருகிறது. அதேபோல், சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் பல பள்ளிகளின் சார்பில் நடந்த விழாவில், குருசாமி பாளையம் இராமலிங்கம் உயர் தொடக்கப் பள்ளியின் நிர்வாகி பொன்னாடையை ஐயாயிரத்தொரு ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அந்த நிர்வாகி ஒரு மூதாட்டி இருப்பினும் அம்மையாருக்குப் பொன்னாடை போர்த்த என் மனம் இடம் தரவில்லை. பொன்னாடையை மடித்துப் பணிவோடு முதியவரின் கரங்களில் ஒப்படைத்தேன். - இப்படியாக எனக்கு வந்த தனிப்பட்ட பெருமைய்ைப் பெர் துச் சொத்தாக்கி, பள்ளிகளில் - கல்வியின் மேம்பாட்டுக்கே படைத்து அடிக்கல் நாட்டுவிழா, புதுக்கட்டிடத் திறப்பு விழா போன்ற சடங்குகளின்போது விழா எடுப்பார் விழா நடத்துவோருக்கு நினைவுச் சின்னமாக வெள்ளியினாலான கொல்லறு, சாவி போன்றவற்றைப் பரிசளிப்பார்கள். அந் நினைவுச் சின்னத்தின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்படாது இருந்தால் அதை விழாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/481&oldid=788288" இலிருந்து மீள்விக்கப்பட்டது