பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 443 பங்குகொண்ட அரசு ஊழியரே எடுத்துக் கொள்ளலாம் என்பது அக் கால அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு முறை. எனக்கு வழங்கிய பொருள்களை அப் பள்ளிக் கூடத்திலேயே நினைவுச் சின்னமாக வைக்கும்படி கொடுத்தேன். சிலவேளை பெரியவர்களுடைய ஆதரவு கல்விக்கு அதிகம் தேவைப்பட்டபோது, அத்தகையோர்களின் வற்புறுத்தலின் பேரில் சிலவற்றை என்னோடு கொண்டுவர நேர்ந்தது. அவற்றைப் பொதுக்கல்வி இயக்ககத்தில் பாதுகாப்பான இரும்பு அலமாரியில் வைத்துப் பூட்டி இருந்தேன். அவற்றில் ஒன்று கூட அரசு வரம்புக்கு மேற்பட்ட விலை உடையதல்ல. இருப்பினும் பதினைந்து சின்னங்கள்போல் அலுவலகத்தில் என் பாதுகாப்பில் இருந்தன. அவை போக இரண்டு பொன்னாடைகள் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்தன. அவை எப்படி வந்தன? தந்தையும் மாமாவும் என் சொந்த ஊராகிய நெய்யாடுபாக்கம்-உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது. நான் பத்மபூரீ விருது பெற்ற போது அவ்வொன்றியத்தின் தலைவராக வழக்கறிஞர் திருவானைக் கோயில் இராஜசேகரன் விளங்கினார். துணைத்தலைவர் என் தாய்மாமன் நெ. கோ சுந்தரசேகரன். அணிவித்த பொன்னாடைகள் அவ்வொன்றியம் பத்மபூரீ விருது கிடைத்தமைக்காக எனக்குப் பாராட்டு விழா எடுக்க முயன்றது. * பொன்னாடை போர்த்தினால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. அப்படி முடிவு செய்தால், பொன்னாடைச் செலவை என் தாய்மாமன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். அப்படியே முடிவு செய்தார்கள். சொல்லியவாறே செலவினை அவர் ஏற்றுக் கொண்டார். பிறந்த ஊரிலும் நான் பாராட்டப்பட்டேன். நெய்யாடு பாக்கம் ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்திப் பொன்னாடை போர்த்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/482&oldid=788289" இலிருந்து மீள்விக்கப்பட்டது