பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 நினைவு அலைகள் அதன் செலவை ஊரார் சார்பில் என் தந்தையார் ஏற்றுக் கொண்டாராம். விழாவிற்கு ஒப்புக்கொள்ளும்போது அந்த இரண்டு ஏற்பாடும் எனக்குத் தெரியாது. ஒவ்வொன்றிலும் விழா முடிவில் மேற்படி தகவலைச் சொல்லி ஏலம் விடாதபடி என்னைத் தடுத்துவிட்டார்கள். நெய்யாடுபாக்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. எஸ். சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கிப் பொன்னாடை போர்த்தி உரையாற்றுகையில், “பொன்னாடை போர்த்த நிதி திரட்ட வில்லை. எனவே, அதை ஏலத்திற்கு விடாமல் உடன் எடுத்துக்கொண்டு போக வேண்டுகிறேன்” என்றார். இரண்டையும் சென்னைக்குக் கொண்டு வந்தாலும் அலுவலக அலமாரியில்தான் பூட்டி வைத்திருந்தேன். சாவி, கொல்லறு, ஆகியவற்றோடு இரு பொன்னாடைகளும் இருந்தன. பின்னர் உரிய காலத்தில் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்தேன் அதன் விவரத்தைப் பின்னர்க் காண்போம். ஆசிரியர்களுக்கு விருது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் எனக்குப் ‘பத்மபூஷன் விருது அளிக்கப் பரிந்துரை போயிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இரு வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டேன். தன்னாட்சி இந்தியாவில் அரசு விருது பெறும் முதல் பொதுக் கல்வி இயக்குநர் என்று எண்ணி மகிழ்ந்தேன். அதே நேரத்தில் என் சாதனைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தராமல் நான் மட்டும் புகழ் பெறுவது சுரண்டலாகத் தோன்றிற்று. சில நாள் அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தேன். வழியொன்று தென்பட்டது. ஏற்கெனவே இந்திய அரசு ஆண்டுதோறும் சில உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்-பல தொடக்கப் பள்ளி ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/483&oldid=788290" இலிருந்து மீள்விக்கப்பட்டது