உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் கற்போம் எல்லோரும் உழைப்போம் எல்லோரும் வாழ்வோம் 445 களுக்குமாக மொத்தத்தில் 40 பேர்களுக்குத் தேசிய விருது வழங்கும் முறை செயல்பட்டு வந்தது. பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில விருது வழங்கலாம் என்று தோன்றிற்று. மெல்ல அதைக் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களின் காதில் போட்டேன். அவர் வரவேற்றார். திட்டம் உருவாயிற்று. தொடக்கத்தில் மாநிலத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விருது வழங்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு மார்ச்சு இறுதி வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாநில விருது வழங்கும் முதல் விழா சென்னை இராசாசி மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடந்தது. ஆளுநர் பதவியேற்கும்போது என்ன சூழல் இருக்குமோ அத்தகைய சூழல் அன்று இருந்தது என்றால் மிகையல்ல. மேற்படி விழாவிற்குப் பிறகுதான் புதுடில்லியில் குடியரசு நாள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தில்லியில் பத்மபூரீ வழங்கும் விழா 1961 ஏப்ரல் திங்கள் குடியரக்த் தலைவர் மாளிகையில் உரிய அமைதியோடும் பொலிவோடும் டாக்டர் ராசேந்திரபிரசாத் ஒவ்வொருவருக்கும் விருது வழங்கினார். விருதுப் பெருமை பெற்றவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பெருமை பெறுதலில் இருக்கின்ற உள்ளார்ந்த மகிழ்ச்சியை விட, அவ் வேலையில் அடையாளம் கண்டு பாராட்டுபவர்கள் இருந்தாலே மெய்யான மகிழ்ச்சி உண்டாகும். முதுமை ал, гтгт 5 литцогт 4, STSBT தந்தையையோ, என் தாய்மாமனையோ டெல்லி விழாவிற்கு அழைத்துக்கொண்டு போக முடியவில்லை. “பார்த்து மகிழ ஒருவரும் இல்லாத் நிலையிலா பத்மபூரீபெற வேண்டும்” என்று நான் என் மனைவியிடம் சொன்னேன். அவர் மலையளவு வேதனை யையும் தாங்கிக்கொண்டு, என்னோடு வந்து, நான் விருது பெறுவதைக் கண்டு மகிழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/484&oldid=788291" இலிருந்து மீள்விக்கப்பட்டது