பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 - நினைவு அலைகள் விழா முடிந்ததும் அப்போது இந்திய நாடாளுமன்ற அவையின் தலைவராக விளங்கிய மாண்புமிகு சஞ்சீவி ரெட்டியும் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவும் என்னை அடையாளம் கண்டு வந்து, என்னைக் கைகுலுக்கிப் பாராட்டிய காட்சி இன்றும் இனிக்கிறது. இயக்குநர் வாழ்க சஞ்சீவி ரெட்டியும் பிரதமர் நேருவும் அடையாளம் கண்டு பாராட்டுகையில், தமிழ்நாட்டு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் பொது மக்களும் பாராட்டாமல் இருப்பார்களா? நான் எங்குச் சென்றாலும் வழியில் உள்ள சிற்றுார்ப் பள்ளிகளிலெல்லாம் மாணவர்களைச் சீருடையில் அணிவகுத்து நிற்கச் செய்வார்கள். - - முன்னர் இயக்குநர் வாழ்க’ என்று முழக்கமிட்டு வாழ்த்திய குழந்தை உள்ளங்கள் 'பத்மபூனி இயக்குநர் வாழ்க’ என்று வாழ்த்தத் தொடங்கின. - இரண்டொரு நாள்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். - ஒருமுறை மாலைப்பொழுதில் சங்கரன் கோவில் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். இரவு அவ்வூரில் தங்கினேன். அடுத்த நாள் காலை, அங்கிருந்து புறப்பட்டு ராஜபாளையம், பூரீவில்லிபுத்துார், விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டை சென்றேன். - __ ராஜபாளையத்தை நெருங்கும்போதே சாலையின் இரு மருங்கிலும் சீருடை அணிந்த மாணவர் மாணவியர் பட்டாளத்தைக் கண்டேன். வெவ்வேறு உடையில் ஆசிரியர், ஆசிரியைகள் உடனிருந்தனர். அவர்களை நெருங்கியதும் நான் பயணம் செய்த கார் நின்றது. பாரத ரத்தினமாக வளர்க பள்ளியின் சார்பில் ஒரு குழந்தை மாலையிட்டு “தாமரைத் திருவே வாழ்க! பாரத ரத்தினமாக வளர்க!” என்று முழக்கமிடட், மற்றவர்கள் அவற்றை எதிரொலித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/485&oldid=788292" இலிருந்து மீள்விக்கப்பட்டது