பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

srebGanggih sibsumih sráistarogih o-sopỦGumih srebosanggih sung Ganti 447 அந் நொடியில் எனக்குத் திடீரென்று "ஞானோதயம் வந்தது! “இப்போது நான் கற்றுக் கொடுக்கப் போவதை முழங்குவீர்களா?” என்று மாணவர்களைக் கேட்டே ன் "ஆம்" என்று எல்லோரும் குரல் கொடுத்தனர். அடுத்த நொடி, "எல்லோரும் வாழ்வோம்! நன்றாக வாழ்வோம்! ஒன்றாக வாழ்வோம்” என்று உரத்துக் கூறினேன். பிள்ளைகள் அவற்றைத் திருப்பி ஒலித்தார்கள். மாணவர் அணிவகுப்பு முடியும்வரை பல மீட்டர் தூரம் நடந்து வணங்கிவிட்டு, கார் ஏறிப் புறப்பட்டேன். - * * நான் பூரீவில்லிபுத்துார் போவதற்குள் மேற்கூறிய கருத்து மேலும் வளர்ந்துவிட்டது. "எல்லோரும் வாழ்வோம்!” என்னும் முழக்கத்தோடு எல்லோரும் உழைப்போம்’, ‘நன்றாக உழைப்போம்’ ஒன்றாக உழைப்போம்”, ‘எல்லோரும் கற்போம், நன்றாகக் கற்ப்ோம்’, 'ஒன்றாகக் கற்போம்” என்று முழங்கும்படி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். முழக்கம் ஒழுங்கு செய்யப்பட்டது சில நாள்கள் அப்படியே செய்தார்கள். ஒரு சிற்றுாரில் ஒர் ஆசிரியர், ஐயா, எல்லோரும் கற்பதை முதலிலும் எல்லோரும் உழைப்பதைப் பிறகும் எல்லோரும் வாழ்வதை நிறைவாகவும் முழங்கும்படி வரிசையை மாற்றிவிட்டால் நன்றாக இருக்காதா? என்று என் காதோடு உரைத்தார். அதில் பொருத்தம் இருப்பதாகப் புலனாயிற்று எனவே, பள்ளிக்கூடங்களில் இயக்குநரையோ அலுவலர்களையோ போற்றிப் புகழ்வதற்குப் பதில் எல்லோரும் கற்போம்” என்பதில் தொடங்கி எல்லோரும் வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம்’ என்று முடிக்கும் மரபு வளர்ந்து பரவிவிட்டது. செய்தித் தாள்கள் இவ் ஆக்க ஒலிகளை வெளியிட்டு ஊக்குவித்தன. பல்லாண்டு காலம் தமிழ்நாட்டில் கற்போரும் கற்பிப்போரும் காலை இறைவணக்கத்திற்குப் பிறகு நல் வாழ்த்தையும் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/486&oldid=788293" இலிருந்து மீள்விக்கப்பட்டது