பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 - நினைவு அலைகள் - வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி ஏறத்தாழ பதினைந் தாண்டுகளுக்குப் பிறகு கோவை திரு. அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியைப் பார்க்க நான் சென்ற போது அங்கிருந்த பள்ளிக் குழந்தைகள் என்னைக் கண்டதும் மேற்படி முழக்கங்களை ஒலித்தார்கள். உடனிருந்த பெரியவர் முன்னாள் கல்வி அமைச்சர் திரு. தி. சு. அவினாசிலிங்கம் அவர்கள் “இது எங்கள் பள்ளிகளில் வழிபாட் டோடு சேர்ந்து இருக்கிறது, நாள்தோறும் ஒலிக்கப்படுகிறது” என்று என்னிடம் கூறினார். 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்’ என்பார்களே அதைப்பெற்றது போல் இருந்தது என் நிலை. மற்ற பள்ளிகளில் ஏனோ இந் நன்முழக்கங்களை மறந்து விட்டார்கள்! கல்வி என்பது கற்பவருக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வளர்ப்பது மட்டுமல்ல; அது கற்பவருக்குச் சமுதாயத்தில் உள்ள இடத்தைக் கற்பிப்பதும் ஆகும். எனவே, அப் பணியையும் ஆற்றும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். ‘நான் மொழியால் தமிழன்; நாட்டால் இந்தியன் இனத்தால் மனிதன்” என்று முதலில் சொல்லி வந்ததை மாற்றி “நாம் மொழியால் தமிழர்கள்; நாட்டால் இந்தியர்கள்: இனத்தால் மனிதர்கள்” என்ற கருத்துக் கோவையை எல்லாக் கூட்டங்களிலும், மாணவர்கள் கூட்டமாயினும் சரி, ஆசிரியர் கூட்டமாயினும் சரி, பொதுமக்கள் கூட்டமாயினும் சரி, பல்லாண்டு பரப்பி வந்தேன். அது வீண் போகவில்லை! நாட்டு வைத்தியம்போல மெல்ல வேலை செய்தது. 46. பெரிய அலுவலரின் தன்முனைப்பு ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை’ என்பது நாட்டு வழக்கு. அதன் உண்மையையும் அதனால் ஏற்படவிருந்த தீங்கையும் தடுத்து நிறுத்தும் பொறுப்பில் என்னை அறியாமலேயே நான் மாட்டிக்கொண்டேன். * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/487&oldid=788294" இலிருந்து மீள்விக்கப்பட்டது