பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நினைவு அலைகள். உள்ள விதிமுறைகளை ஆழ்ந்து பரிசீலனை செய்ய ஒர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது. அக் குழுவின் தலைவர் திரு. ஆர். ஏ. கோபால்சாமி ஐ. சி. எஸ். உறுப்பினர் நிதிச் செயலர் திரு பி. ஏ. வர்கீஸ் ஐ. சி. எஸ். மற்றும் திரு. நெ.து. சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநர்; திரு. எம். சின்னசாமி நாயுடு, தலைமை ஆசிரியர் மணி, உயர்நிலைப் பள்ளி, கோவை; திரு சீனிவாசவரதன், தலைமை ஆசிரியர், இந்து உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை - ஆகியோர் உறுப்பினர்கள். ஒய்வுபெற்ற துணை இயக்குநர் திரு. முகமது உஸ்மான் குழுவின் செயலர் - என்பது அரசு ஆணை. இந்த ஆணை வந்தபோது, அதில் வெடிகுண்டு மறைந் திருக்கிறது என்று எனக்குப் புலப்படவில்லை. - சிலநாள்களில் அது புலனாயிற்று! வெடி குண்டு டெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றிற்குச் சென்னையில் இருந்து புகைவண்டியில் புறப்பட்டேன். புகைவண்டி புறப்படுவதற்குப் பதினைந்து மணித்துளிகள் இருக்கையில், சென்னை அரசின் தலைமையகத்தில் இருந்து ஒருவர் வந்து அவசரக் கடிதம் ஒன்றை என்னிடம் கொடுத்தார், அடுத்த நொடி, உடைத்துப் பார்த்தேன். என்ன சொல்லிற்று? நான் தில்லியில் இருந்து திரும்பிச் சென்னை வந்து சேரும் அன்று பகல், முன்னே கூறிய நிதி உதவிக் குழுவின் முதற் கூட்டம் நடைபெறும் என்று சொல்லிற்று. அதில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக என்று பத்துப் பன்னிரண்டு பக்க இணைப்பு ஒன்று இருந்தது. இதில் சூழ்ச்சி ஏதோ இருக்கிறது என்று என்னுள் மின்னிற்று: அதைக் காட்டிக் கொள்ளவில்லை, புகைவண்டி புறப்பட்டதும் கடிதத்தோடு இணைத்திருந்த திட்டத்தை ஆழ்ந்து படித்தேன். + ஒவ்வொரு பத்திக்கும் பக்கத்திலேயே என் கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/489&oldid=788296" இலிருந்து மீள்விக்கப்பட்டது