பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Qufu olaylaeus: ģistropeosorüt! 451 குழுத் தன்லைவரால் அனுப்பப்பட்ட திட்டத்துக்கு விரிவான என் கருத்தை எழுதி முடித்தேன். டில்லி போய்ச் சேர்ந்ததும், அதை உறையிலிட்டு, போதிய அஞ்சல் தலை ஒட்டி என் சென்னை அலுவலகத்திற்கு அனுப்பினேன். ‘என்னுடைய கருத்துகளை உண்மையாக, சரியாகத் தட்டச்சு செய்து போதிய படிகள் எடுத்து நிதி உதவிக்குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைவர் மூலம் கொடுத்து விடும்படியும், என் படியைத் தனிக் கோப்பில் என் வீட்டில் சேர்ப்பிக்கும்படியும் உரிய அலுவலருக்குக் கடிதம் எழுதினேன்.” அப்படியே செய்யப்பட்டது வெந்த புண்ணை அதிகம்.குத்தப் போவதில்லை. முளையிலேயே கிள்ளி எறிந்தேன் முளையிலே கிள்ளி எறிந்ததைச் சுருக்கமாக எழுதி விடுகிறேன் "எல்லோருக்கும் இலவசக்கல்வி என்பது தேவையற்றது; அதன் செலவு பெரிதாகிக் கொண்டே போகக்கூடியது. 'அரசு கல்விக்காகச் செய்யும் செலவைக் கடுமையான வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். "அது ஆண்டுக்கு ஆண்டு தாராளமாக உயர விடக்கூடாது. பிறவி பற்றி எந்தச் சலுகையும் இருக்கக்கூடாது. 'எனவே, எல்லோருக்கும் அரைச் சம்பளம் வாங்கவேண்டும்: குறிப்பிட்ட மட்டத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் சிலருக்கு மட்டும் உதவிச் சம்பளச் சலுகை கொடுக்கலாம்’ என்பது புதிய திட்டத்தின் சாரம். நான் பெரும்பாலானவற்றிற்கு மாற்றுக் கருத்து கூறினேன். "அரசின் வரி விதிப்பிற்கோ, வருவாயின் அளவிற்கோ வரம்பு கட்டிக் கொள்ளப் போவதில்லை; இரண்டும் பெருகிக் கொண்டே போகும். "அப்படி இருக்க, அரசின் கல்விச் செலவுக்கு வரம்பு கட்டுவது முறை அல்ல. கல்விச் செலவுதான் மெய்யானது; முறையானது. “கல்வி இலவசமாக வேண்டுமா - என்பன் போன்றவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/490&oldid=788298" இலிருந்து மீள்விக்கப்பட்டது