உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 நினைவு அலைகள் ‘நிர்வாகிகள் அதில் முனைப்புக் காட்டுவது அரசியல் ஈடுபாடு ஆகும் ‘எல்லோருக்கும் இலவசக்கல்வி என்பதால் பல்வேறு சாதிகளுக்கிடையே இருந்து வந்த போட்டி-பொறாமை உணர்ச்சி, ஒரளவு முனை மழுங்கியுள்ளன. 'எனவே, எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பதில் கைவைக்காமல், வேறு விதி முறைகளைப் பற்றிச் சிந்திக்கலாம். என்பது என் கருத்தின் சாரம். நிதிக்குழுவின் கூட்டம் உரிய கால்த்தில் நடந்தது. கல்விச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் குழுத் தலைவர் தம்முடைய தலைமை உரையில், "சம்பள மில்லாப் படிப்பு என்பது முதலில் பழங்குடி மக்களுக்காக வந்தது. பிறகு, பிறசாதி மக்களுக்கு விரிவாயிற்று. “இப்போது யார் யாரோ இலவசக்கல்வி பெறுகிறார்கள். இதனால் அரசுக்குச் செலவு பெருகிக்கொண்டே இருக்கிறது. “இதை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்தப் போவதில்லை “நாம்தான் இந்தச் சங்கடமான பணியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு இதுவே நல்லதருணம்! "புதிய திட்டத்தை இக் குழு பரிந்துரைத்து, அதை அரசும் ஏற்றுக்கொள்ள வைத்தால், அரசியல் சட்ட அமைப்பின் கல்வி பற்றிய நெறிக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வாய்ப்புக் கிடைக்கலாம். “அரசியல் தலைவர்களுக்குக் கட்டை போடவேண்டும்; அவர்கள் மனம்போனபடி கல்விக்கு வாரி விடாதபடி முட்டுக் கட்டையாக அமையவேண்டும். "அப்போதுதான் நிர்வாக இயந்திரத்திற்கு மதிப்பு இருக்கும்” என்று சொல்லிக்கொண்டு வந்தார். மறுத்துப் பேசினேன் அதற்குமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தலைவர் அனுமதி கோரி, குறுக்கிட்டுச் சில கூறினேன்: “நாமெல்லாம் ஊழியம் பார்க்க வந்து இருக்கிறவர்கள். நம்முடைய பட்டறிவை, திறமையை, வல்லுநர் தன்மையை, யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/491&oldid=788299" இலிருந்து மீள்விக்கப்பட்டது