பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய அலுவலரின் தன்முனைப்பு 453 ஆண்டாலும் காய்தல் உவத்தல் இன்றிக் கொடுக்கக் கடமைப் பட்டவர்கள்! “பொது மக்கள் நலனுக்குத் தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டியவர்கள் - அரசியல்வாதிகளே! “நான் மக்களாட்சி முறையில் முழு நம்பிக்கையுடையவன். 'எனவே, நான் விரிவாக மாற்றுக் குறிப்பு அனுப்பியுள்ளேன். "அதையும் உறுப்பினர்களுக்கு வழங்குங்கள். படித்துக் கருத்துரைக்க அவர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள். இது பொது நன்மைக்கு உயிர் போன்ற மிகப் பெரிய பிரச்சினை. ■ “தயவுசெய்து சட்டென்று முடிவுக்கு வரவேண்டாம் - என்று மிகப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.” இது என் உரை. விலகுகிறேன் "குழுத் தலைவர் என்ற முறையில் என்னுடைய குறிப்பைத் தவிர வேறு எதையும் இங்கே வழங்க அனுமதிக்க மாட்டேன்” என்று அழுத்தமாகத் தலைவர் பதில் கூறினார். "குழு பற்றிய ஆணையில் டைரக்டர்’ என்ற பதவிப் பொறுப்பில் என்னைச் சேர்க்கவில்லை. என் பெயர் போட்டே உறுப்பினராக நியமித்திருக்கிறீர்கள். “என் கருத்தைக் கேட்கவும் இடங் கொடுக்க விரும்பாத தாங்கள் தயவு செய்து சிறு உதவி செய்யுங்கள். “நான் இக் குழுக் கூட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள இசைவு தாருங்கள். “தாங்கள் விரும்பினால் இயக்குநர் என்ற முறையில் என் கருத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என்று நானும் அழுத்தமாக உரைத்தேன். o - * * - நிதிச் செயலர் திரு. வர்கீஸ் குறுக்கிட்டார். "நாம் போடுகிற விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டியவர் பொதுக்கல்வி இயக்குநரே. "அவர் கருத்து சரியா, தவறா என்பது அவர் குறிப்பைப் படித்த பின்புதான் சொல்ல வேண்டும். “எனவே, அக் குறிப்பை எல்லோருக்கும் கொடுங்கள், தயவு செய்து கூட்டத்தை ஒத்தி வையுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/492&oldid=788300" இலிருந்து மீள்விக்கப்பட்டது