உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 நினைவு அலைகள் “டைரக்டர் கருத்தைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த பிறகு மீண்டும் கூடுவோம்” என்று வழி காட்டினார். இரண்டொரு மணித்துளிகள் விவாதித்த பிறகு கூட்டம் ஒத்திப் போடப்பட்டது. என்னுடைய குறிப்பு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. “நாங்கள் கலைந்து போகும்போது, நிதிச்செயலர் என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு நிதி அமைச்சரிடம் சென்றார். நிதி அமைச்சரிடம் குழுக் கூட்டத்தில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு “எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம் பற்றிக் கல்விச் செயலரோடு நீங்கள் விவாதித்தீர்களா? அவருடைய திட்டம் உங்கள் ஆலோசனைப்படி இருக்கிறதா?” என்று அமைச்சரைக் கேட்டார். “கல்விச் செயலர் என்னிடம் அதுபற்றிப் பேசவில்லை. நான் அத்தகைய திட்டமும் கொடுக்கவில்லை” என்று அமைச்சர் பதில் கூறினார். பிறகு இரு குறிப்புகளையும் படித்துப் பார்த்தார். “கல்விச் செயலரின் திட்டம் தேவை இல்லாதது. நடைமுறையில் தொல்லைகளை விளைவிக்கக் கூடியது” என்றார். அதைக் கேட்டுக்கொண்டு நிதிச்செயலரும் நானும் வெளியே வந்தோம். அடுத்த கூட்டத்தில் நடைமுறையில் இருக்கிற இலவசக் கல்வித் திட்டத்தில் கைவைப்பது இல்லை’ என்று முடிவு செய்யப்பட்டது. இமா லய அநீதி சட்டமன்றப் பொறுக்குக்குழு, கல்வி பற்றிய வெள்ளை. அறிக்கையின் பேரில் பல புரிந்துரைகளைக் கொடுத்தது என்று முன்னரே குறித்துள்ளேன். "தனியார் தொடக்கப் பள்ளிக்கூடங்களில் ஐவரும் அதற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் வேலை செய்தால், அவர்களில் ஒருவராக இடைநிலை ஆசிரியரை நியமித்துக் கொள்ளலாம்’ என்கிற தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/493&oldid=788301" இலிருந்து மீள்விக்கப்பட்டது