பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455 நினைவு அலைகள் ஆயிரக்கணக்கானவர்கள் வயிற்றில் அடிப்பதா? அர அர் ஆணையை நடைமுறைப் படுத்தாமல், அரசின் தண்டனைக்கு ஆளாவதா? இவ்விரு கேள்விகளும் என் முன்னின்று மிரட்டின. முறைப்படி, அப்போதிருந்த விதிப்படி, இடைநிலையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைத் திடுதிப்பெனத் தக்க காரண மின்றிப் பதவி இறக்கம் செய்தல் இமாலய அநீதி ஆகும். நீதியைக் காப்பதற்காகத் தேவைப்பட்டால் தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்’ என்ற முடிவுக்கு வந்தேன். அரசு ஆணையைப் படி எடுத்து அனுப்பவில்லை. மீண்டும் மறுப்பு மாறாக, அரசின் செயலருக்கு நேர்முகக் கடிதம் அடக்கமாகவே - விவரமாக எழுதினேன். “அரசின் புதிய ஆணை சட்டமன்றக் குழுவின் சிந்தனைக்கு நேர்மாறானது. “அதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பல்லாண்டு களாக நடைமுறையில் இருக்கும் உரிமையை எடுத்து நிர்வாகிகளுடைய கசப்பையும் ஆசிரியர்களுடைய பதவி இறக்கதையும் வளர்ப்பது சட்டத்துக்குப் புறம்பானது. “இத்தகைய சட்ட விரோதமான பிழை நேரிடக்கூடும் என்று என்னால் கனவு காணவும் முடியவில்லை. “எனவே, அருள்கூர்ந்து ஆணையை மறுபரிசீலனை செய்யுங்கள். அமைச்சரின் கவனத்திற்குக்கொண்டு வாருங்கள். “இதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை நேரில் விளக்க எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்” என்று எழுதினேன். ஆசிரியர் கிளர்ச்சி இந்தத் தவறான ஆணை காட்டுத் தீ போலப் பரவிற்று ஆசிரியக் கழகங்கள் ஆங்காங்கே கூடிக் கண்டனம் தெரிவித்தன. அரும்பாடுபட்டுத் தேடிய நல்லெண்ணம் நொடியில் பாழாக விடுவதா? மாற்றார் சும்மா இருப்பார்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/495&oldid=788303" இலிருந்து மீள்விக்கப்பட்டது