உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய அலுவலரின் தன்முனைப்பு 457 ஆசிரியர் கிளர்ச்சிக்குத் தூபம் போட்டார்கள். முன்கூட்டி அறிவித்துவிட்டு, தஞ்சைத் தரணியிலிருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சைக்கிள் பேரணி நடத்திச் சென்னை வந்தடைந்தனர் சென்னைத் திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தித் தங்கள் கோரிக்கையை விடுத்தனர். கோரிக்கை வெற்றிபெற்றது. பழைய நிலை நீடிக்கும்’ என்ற அரசு ஆணை வந்தது. எனவே, என் தலை தப்பியது. கொள்கை, சட்டமன்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய விவகாரத்தில்கூட அரசு அலுவலர்கள் தன்னிச்சையாகக் கலந்து கொண்டது முறையல்ல. இருப்பினும், அமைச்சர் அவர்கள் மேல்நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் பொறுப்பேற்றார் சென்னை சட்ட மன்றத்தில் தவறான ஆணை பற்றிக் கேள்வி எழுந்த பொழுது, “ஆணை சரியல்ல. அது எந்த மட்டத்தில் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அமைச்சர் என்கிற முறையில் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றாரே ஒழிய, எந்த அலுவலர் அத் தவறைச் செய்தார் என்று அலுவலர் பெயரை அவர் வெளிப்படுத்தவே இல்லை. முற்காலத்தில் பெரிய அலுவலர்கள் துணிந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு நிர்வாகம் விரைந்து செயற்பட உதவியதற்கக் காரணம், தம்மை அறியாமல் தவறு நேர்ந்து விட்டாலும் பாதுகாக்கப் படுவோம் என்னும் சூழல் இருந்ததே ஆகும். மற்றொரு வழக்கு பற்றிச் சொல்லுகிறேன் ஒரு தொழில், நாட்டுடைமை ஆக்கப்பட்டால், அதன் நோக்கம் பொதுமக்களுக்கும் நன்மையாக விளங்கவேண்டும். அதற்கு மாறாக, இலாபம் முன்பைவிட அதிகம் வந்தது என்றோ, பணியாளர்களுக்குக் கூடுதல் ஊதியம் கிடைக்கிறது . என்றோ பெருமைப்படுவது நிறைவாகாது. 'தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளுக்கான மொழிப் பாட நூல்களை அரசே வெளியிடுவது என்னும் முடிவு ஒரு புயலைக் கிளப்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/496&oldid=788304" இலிருந்து மீள்விக்கப்பட்டது