உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நினைவு அலைகள் மலிவு விலையில் பாடப் புத்தக நூல்கள் அரசு போதிய காலம் கொடுத்தது. பாடநூல்களை எழுதி வாங்கி அச்சிடும் வேலையும் கணக்குப்படி சரியாக நடந்தது: நூல்களுக்கு விலை போடும் நிலை நெருங்கிற்று. அரசு வெளியீடுகளுக்கு விலை எப்படி முடிவு செய்வார்கள் தெரியுமா? அடக்க விலை ஒரு ரூபாய் என்றால், விற்பனை விலை இரண்டு ரூபாய் என்று போடுவார்கள். அதிலேயும் ஒரு நியாயம் இருக்கிறஅது. முற்காலத்தில் அரசு எத்தகைய நூல்களை வெளியிட்டது? சட்டங்கள் விதிமுறைகள் போன்றவைகளையே வெளி யிட்டது. ஒர் ஆயிரம் பிரதிகள் அச்சடித்தால், அவற்றை விற்கப் பல்லாண்டுகள் பிடிக்கும். அதுவரை நூல்களைப் பாதுகாக்க வேண்டும். go ஆண்டுதோறும் தணிக்கை செய்து சரிபார்க்க வேண்டும். எனவே 'தலைச்சுமை அதிகம். இதற்குப் பழக்கப்பட்டவர்கள் அரசு அச்சுத்துறை அலுவலர்கள். எனவே "சாதாரண அரசு வெளியீட்டைப் போலவே பாட நூல்களின் விலையை அடக்க விலைக்கு இரு மடங்காக வைக்க வேண்டும்’ என்று அரசுக்குப் பரிந்துரை வந்தது. அப் பரிந்துரையை அரசு எனக்கு அனுப்பி என் கருத்தைக் கேட்டது. நான் கூடாது' என்று காரணம் காட்டி விவரமாக எழுதினேன். “பாடநூல்கள் பெரும்பாலும் பள்ளிகள் தொடங்கிய சில வாரங்களில் விற்றுப்போகும். அதனால் போட்ட பணத்தை இரண்டொரு திங்களில் எடுத்துவிடலாம். “அரசின் மற்ற வெளியீடுகளை வெளி ஊர்களில் விற்க நிலையங்கள் கிடையா. “பாட நூல்களைச் சென்னை நகரில் மட்டும் விற்றுக் கொண்டிருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/497&oldid=788305" இலிருந்து மீள்விக்கப்பட்டது