உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 459 --- “பல ஊர்களிலும் விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும். “இந்தச் செலவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அடக்க விலைக்குமேல் கால் பங்கு சேர்த்து விலை போட்டால் போதும்; அதுவே மக்களுக்கு நீதியாகும்” என்று எழுதினேன். அலுவலர்கள் மட்டத்தில் முடிவுக்கு வர இயலவில்லை இறுதியில் முதலமைச்சரும் நிதி அமைச்சரும் பெரிய அலுவலர்களை வைத்துக்கொண்டு பேசி முடித்தார்கள். என்ன முடிவு? “முதல் தமிழ்ப்பாட நூலின் அன்றைய அடக்க விலை இருபத்துநான்கு பைசா. அதோடு பாதி சேர்த்தால், முப்பத்தாறு பைசா ஆகும். அதற்குப் பதில் முப்பது பைசா விலை போடவும்; இதே அடிப்படையில் மற்ற நூல்களுக்கும் விலை போடவும்’ என்று முடிவு செய்யப்பட்டது. என் தலை தப்பிற்று!. 47. மாணவர்கள் ஊக்கம் நடமாடும் உடல்நலத் தணிக்கையகம் சென்னை மாநிலத்தின் முதல் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசுக்குக் கிடைத்தன. அரசு, அவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டது. அதன்படி, கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகங்களின் கீழ் பணியாற்றும் அதே தகுதியுடைய எல்லா ஆசிரியர்களுக்கும், ஒரே சம்பளம்” என்கிற கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. புதிய சம்பள விகிதங்கள் பல திங்கள், முன் தேதியிட்டு வழங்கப்பட்டன. எனவே, ஆசிரியர்களுக்குச் சம்பளப் பாக்கி’ என்ற பெயரால், அக் காலத்துக்குக் கணிசமான தொகை வந்தது. ஆசிரியர் சமுதாயம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் எனக்குத் தாமரைத் திரு' என்கிற ‘பத்ம பூரீ விருது கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/498&oldid=788306" இலிருந்து மீள்விக்கப்பட்டது