உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 நினைவு அலைகள் இது வடார்க்காடு மாவட்ட இளநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் சங்கத்திற்கு இரட்டிப்புப் புரிப்பை ஏற்படுத்தியது. ஒரு வகையில் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்க நினைத்தது. தங்களுக்கு வரப்போகும் சம்பளப் பாக்கியில் ஒரு விழுக்காடு ஒரு பொது நன்மைக்குச் செலவிட எண்ணிக் கலந்து உரையாடி முடிவு செய்தனர். என்ன பொது நன்மைக்கு ஏற்பாடு செய்வது? உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் உடல் நலத் தணிக்கை செய்வது, அதற்காகத் தங்கள் உத்தேச நன்கொடையில் இருந்து ஒரு நடமாடும் மருத்துமனை நடத்துவது ஒரு மருத்துவரையும் உதவியாளர் களையும் நியமிப்பது 'அம்மருத்துவமனை ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களை உடல் நலத் தணிக்கை செய்து வந்த போக்கு வரவுச் செல்வையும் மருத்துவ உதவியாளர் ஊதியச் செலவையும் மாணவரிடம் இருந்து ஏற்கெனவே வாங்கி வரும் உடல் நலத்தணிக்கைக் கட்டணத்திலிருந்து ஈடுசெய்வது என்று முடிவு செய்தார்கள். தலைமை ஆசிரியர்களைப் போலவே பிற ஆசிரியர்களும் அதே விழுக்காட்டில் நன்கொடை கொடுக்க இசைந்தனர். திட்டத்தின் எல்லாக் கூறுகள்ையும் துல்லியமாகக் கவனித்து, மதிப்பிட்டு, கனக்குப் போட்டு நடமாடும் உடல்நலத் தணிக்கையகம் நடத்த முடிவு செய்தார்கள். அதில் உணர்ச்சியைக் கலந்து விட்டார்கள். அதனால் அத் திட்டம் நடைமுறைக்கு வர நீண்டகால தாமதம் ஆயிற்று. அப்படிக் கலந்த உணர்ச்சி என்ன? என் பெயர் சூட்ட விரும்பினார்கள் அந்தத் தணிக்கை அகத்திற்குப் “பொதுக்கல்வி இயக்குநர் தாம ரைத்திரு. நெ. து. சுந்தரவடிவேலு தணிக்கை அகம்” என்று பெயர் சூட்ட முடிவு செய்தார்கள். அந்த நன்றியுணர்ச்சி நல்லதாக இருக்கலாம்! ஆனால், அாக அலுவலர் உடம்புக்கு ஒத்து வராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/499&oldid=788307" இலிருந்து மீள்விக்கப்பட்டது