பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 451 அது அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று. வடார்க்காடு மாவட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிலரை அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முகமது அன்வர் என்னிடம் வந்தார் முன் கூறிய தகவல்களை எல்லாம் சொன்னார். "தணிக்கை யகத்திற்கு என் பெயரைச் சூட்டுவதற்கு இசைவு கேட்டார் 'கணிசமான பணம் கிடைக்கிறபோது அதில் ஒரு விழுக்காட்டைப் பொது நன்மைக்குச் செலவிட வேண்டும் என்பது பேணி வளர்க்க வேண்டிய நல்லுணர்வே! “உங்கள் மாவட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் இந் நல்லுணர்வு பரவி இருப்பது போற்றற்குரியதாகும். அவர்கள் முடிவுப்படி ஒரு மருத்துவத் தணிக்கையகம் நடத்துவீர்களானால் உங்கள் ஆசிரியர்கள் முன்னோடிகளாக இருப்பார்கள். "ஆனால், ஒன்று! அத் திட்டத்தோடு என் பெயரை இணைக் காதீர்கள். 'அரசு ஊழியத்தில் இருக்கும் ஒருவர், எவ்வளவு சிறந்த சேவை செய்வதாகக் கருதப்பட்டாலும் அவர் பதவியில் இருக்கும்போதே அவர் பெயரில் எதையும் நிறுவுவது, விதிமுறைகளுக்குப் புறம்பானது. “எனவே, அதை விட்டுவிட்டு, திட்டத்தை இயக்குநரின் ஒப்புதலுக்கு அனுப்புங்கள் விரைவில் அரசின் இசைவு வாங்கித் தருகிறேன்” என்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் குறுக்கிட்டார், "நானும் அரசு அலுவலராக இருந்தவன்தானே எனக்கும் அவ்விதி முறை நினைவுக்கு வந்தது. "இருப்பினும் நான் தைரியம் கூறி மேற்படி முடிவு எடுக்கச் செய்தேன்.” காமராசரின் இசைவு உங்களிடம் வருவதற்கு முன்பு இக் குழு முதலமைச்சர் மாண்புமிகு காமராசர் அவர்களைக் கண்டு பேசிற்று. “விதிவிலக்குச் செய்து தங்கள் பெயரை அத் திட்டத்திற்குச் சூட்ட ஒப்புதல் கேட்டோம்; செய்து தருவதாக அவர் சொல்லி இருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/500&oldid=788309" இலிருந்து மீள்விக்கப்பட்டது