உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 463 அதுவரை கருவிகள் செறிந்த பள்ளியின் துணைக்கருவிகளை, நூலகங்களை, சோதனைக் கூடங்களை அக்கம் பக்கத்தில் அருகில் உள்ள பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ள விடலாமா? அப்படி உரிமை கொடுத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்களா? இக் கேள்விகள் பிறந்தன. நெடுங்காலம் வாதிட்டுக் கொண்டிராமல் செய்து பார்த்துவிடத் துணிந்தார்கள் தமிழ்ந்ாட்டுக் கல்வியாளர்கள். ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியோடும் சுற்றுப் புறங்களிலுள்ள தொடக்கப் பள்ளிகள் இணைவது விடுமுறை நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் - ஆசிரியர்கள் - மாணாக்கர்களைக் குறிப்பிட்ட நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். - அங்குள்ள சோதனைக் கூடங்களைக் காட்டிக் கருவிகளை அறிந்து கொள்ள உதவுவார்கள். நூலகத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்ப்பார்கள். நல்லவர் வீட்டில் இருக்கும் சமையல் பாத்திரங்கள் பலபோது நண்பர்கள் வீட்டுச் சமையலுக்கும் பயன்படுவதுபோல, குறிப்பிட்ட நடுநிலைப் பள்ளியில் குவிந்துள்ள துணைக் கருவிகள் போன்றவை பல தொடக்கப் பள்ளிகளுக்கும் பயன்பட்டன. அதேபோல் நடுநிலைப் பள்ளிகள் தங்களுக்கு அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளோடு இணைந்து கொள்ளும். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரோடும்-ஆசிரியர்களோடும் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி, குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்று அங்குள்ள சோதனைக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும். பற்றாக் குறையுள்ள நடுநிலைப் பள்ளியோ, உயர்நிலைப் பள்ளியோ, எல்லாம் பெற்ற அதே நிலைப் பள்ளியோடு தொடர்பு வைத்துக் கொள்வதில் தடை ஏதும் இல்லை. F இத் திட்டத்திற்கு “ஞானத் தந்தை திட்டம்’ என்று பெயர் குட்டப்பட்டது. நாடறிந்த ஆசிரியர்கள் தியாகம் இதைப் பொதுமக்கள் வரவேற்றார்கள்; மாநில ஆளுநர் மேதகு விஷ்ணுராம் மேதி போன்றவர்கள் வானொலிப் பேச்சின் வாயிலாகப் பாராட்டி வரவேற்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/502&oldid=788311" இலிருந்து மீள்விக்கப்பட்டது