பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 நினைவு அலைகள் ஞானந் தந்தை திட்டமும் பல பக்கங்களில் பரவிற்று. அதற்கேற்ற தியாக உணர்வு, கூடுதல் பொறுப்பேற்கும் உந்துதல் எங்கிருந்துதான் ஊறிற்றோ? எப்படித்தான் ஊறிற்றோ? இன்று நினைத்தாலும் திகைப்பாக இருக்கிறது! -- தற்பெருமை கொள்ளுதல் தவறு. தன்நிலை அறிதல் வாழ்க்கையின் நரம்பு. i தமிழ் நாட்டில் தொடங்கிய மக்கள் இயக்கங்களாகிய பகலுணவு, சீருடை, பள்ளிச் சீரமைப்பு, மேற்பார்வைப் படிப்பு ஆகியவை இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றதைப் போலவே ஞானத்தந்தை திட்டமும் இந்தியக் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. 'பிற்காலத்தில் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் இதுபற்றி விரிவாகப் பரிந்துரைகள் செய்தது. ஞானத்தந்தை திட்டம் என்கிற பெயரை மாற்றி கல்வி இணையங்கள்’ என்ற பெயரில் பல அரிய பரிந்துரைகளை வழங்கியது. அவற்றைச் செயல்படுத்திப் பார்த்தார்களா? குற்றம் குறை i. கண்டு அவற்றை நீக்க முடியாமல் கைவிட்டார்களா? இல்லை, இல்லை. பேசினார்கள்; நாலாப் பக்கங்களிலும் பேசினார்கள்; பல மட்டங்களிலும் பேசினார்கள், பேசித் தீர்த்தார்கள். ஊக்கமும், உள் வலியும், உண்மையில் பற்றும் இல்லா மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? புதிய கல்விக் கொள்கையிலாவது வளம்பெற்ற பள்ளிகள் வறுமையுற்ற பள்ளிகளுக்குப் பயன்படும் வழிமுறைகளைச் செயல்படுத்த முடிந்தால் நன்றாய் இருக்கும்! ஏற்றத்தாழ்வை ஒழித்த சீருடை சீருடையின் சிறப்புப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சி. - திருநெல்வேலி மாவட்டத்தில் கடம்பூர் என்று ஒரு பேரூர் உள்ளது. அப் பேரூர் மக்களுக்குக் கல்வியில் ஆர்வம் மிகுதி. கல்வித் துறையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் செம்மையாக நடத்திக் காட்டியவர்கள் அவர்கள். i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/503&oldid=788312" இலிருந்து மீள்விக்கப்பட்டது