பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 465 கடம்பூர், அதைச் சுற்றியுள்ள ஊர்கள் ஆகியவற்றில் இயங்கும் பல பள்ளிகளின் சார்பில் இலவசச் சீருடை விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். நிகழ்ச்சி கடம்பூரில், நேரம் முற்பகல். விழாவைச் சிறப்பிக்க வணக்கத்திற்குரிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் இசைந் திருந்தார். அவ் விழாவில் எனக்குப் பங்கு இருந்தது. அடிகளார் நேரம் காத்தலில் கருத்தாய் இருப்பவர். அவர் தமது காரில் கடம்பூரை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து ஊர் மாணாக்கர்கள் சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகச் சீருடையில் சென்று கொண்டு இருந்தார்கள். அக் குழந்தைகளுக்கு அடிகளாரைப் பழக்கமில்லை. அவர்களை நெருங்கியதும் அடிகளாரின் கார் நின்றது. அடிகளார் காரைவிட்டு இறங்கினார். பிள்ளைகள் இன்னார். என்று தெரிந்து கொள்ளாமலே, “வணக்கம், சாமி!” என்று முழங்கினர். அடிகளார். அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?' என்று கேட்டார். - பக்கத்து ஊர்ப் பெயரைச் சொல்லி, அவ் வூரின் மாணாக்கர்கள் என்றார்கள். - “ஊரை விட்டு எங்கே போகிறீர்கள்?’ என்பது அடிகளாரின் அடுத்த கேள்வி. “கடம்பூரில் நடக்கும் சீருடை வழங்கும் விழாவிற்குச் செல்கிறோம்” என்பது பிள்ளைகளின் பதில், “எதற்காகச் சீருடையாக இருக்க வேண்டும்?” என்றார் அடிகளார். எதிரிலிருந்த ஒரு சிறுவன் பளிச்சென்று பதில் கூறினான்; அது கட்டளையர்க இருந்தது. ‘சாமி என்னையும் வரிசையில் இருப்பவர்களையும் பாருங்கள் சாமி. எங்களில் எவன் ஏழை, எவன் பணக்காரன் என்று அடையாளம் காட்டுங்கள் சாமி” என்று சிறுவன் கள்ளங்கபட மில்லாமல் கேட்டுவிட்டான். அடிகளார், “வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.” என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/504&oldid=788313" இலிருந்து மீள்விக்கப்பட்டது