உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 நினைவு அலைகள் பக்கத்திலிருந்த மற்றொரு சிறுவன், “அப்படிங்களா, சாமி? இந்த வரிசையில் நிற்கிற எங்களில், எவன் நாடார் பிரிவைச் சேர்ந்தவன், எவன் தேவர், எவன் ஆதிதிராவிடன் என்று அடையாளம் காட்டுங்கள் சாமி” என்று கேட்டான். மீண்டும் குன்றக்குடி அடிகளார் சிரித்துக் கொண்டே, "அப்படி வேறுபடுத்திக் காட்ட முடியவில்லை” என்றார். “அதற்குத்தான் சாமி சீருடை அணிவது சின்ன வயதிலேயே ஒரு நிலையாய், ஓரினமாய் வளர்ந்துவிட்டால், அப்புறம் பெரியவர்கள் ஆகின்றபோது சாதிச் சண்டை பழங்கதை ஆகிவிடும்” என்று சில பையன்கள் பதில் கூற அடிகளார் பூரித்துப் போனார். அப்போதும் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் கார் ஏறி ஊர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். அங்கே வந்து சேர்ந்த மாணவர்கள், தாங்கள் பார்த்த சாமியார்தான் குன்றக்குடி அடிகளார் என்று தெரிந்துகொண்டு மகிழ்ந்தார்கள். -- வழியில் நடந்த கேள்வி பதிலை அடிகளாரே அவையோர் முன் சுவைபடக்கூறிப் பிள்ளைகளின் புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பாராட்டியபோது அக் குருத்துகள் மகிழ்ச்சியில் திளைத்தன. நெடுங்காலமாகப் பெரும்பாலான கல்வி நிலையங்கள் தகவலை நிரப்பும் நிலையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. கடலனைய செய்திகள், தகவல்கள், கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவற்றில் சிறு பகுதியை மாணாக்கரோடு பகிர்ந்து கொள்வதே கல்வி நிலையங்களின் வழக்கமான பணியாகிவிட்டது. கற்க வருவோர் சிந்தனைத் திறன் உடையவர்கள். சிந்தனைத் திறனே ஆற்றல்களிலெல்லாம் சிறந்தது. அச் சிந்தனைத் திறனை வளர்ப்பதே கல்விக் கூடங்களின் தலையாய கடமை. கலந்துரையாடல் இக் கருத்துடைய நான் தமிழ்நாட்டுக் கல்வியுலகைச் சிந்திக்கத் துாண்டினேன். பள்ளிக்கூட விழாக்களுக்குச் செல்வதோடு நிற்காமல் மேலும் ஒருபடி சென்றேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/505&oldid=788314" இலிருந்து மீள்விக்கப்பட்டது