பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்கள் ஊக்கம் 467 வகுப்பறைகளுக்கும் சென்று மாணவர்களோடு நேருக்குநேர் உரையாடும் போக்கினைத் தொடங்கினேன். அது வியக்கத்தகு பார்வையைக் கொடுத்தது ஆமையும் முயலும் மாணாக்கரோடு நான் உரையாடியதில் பதச்சோறு இதோ! 'குழந்தைகளே! ஆமையும் முயலும் ஒட்டப் பந்தயம்போன கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” இது என் கேள்வி. "ஆம்" என்பது மாணாக்களின் பதில், 'ஒடும் திறன் மிகுதியாக உடையது ஆமையா? முயலா?” இதற்கு “முயல்” என்பது மாணவர் அனைவரின் ஒருமித்த பதிலாயிற்று. "ஒட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றது முயலா?” 'இல்லை. ஆமையே!” எனப் பதில் வந்தது. “ஒடும் திறன் மிகுந்த முயல் தோற்கவும், ஒடும் திறன் குறைந்த ஆமை வெல்லவும் எப்படிச் சாத்தியம் ஆயிற்று” என்றேன். “அதிகத் திறனுடையது ஆணவம் கொண்டு பந்தயத்தை அலட்சியப்படுத்தியதால் தோற்றது. ஆமையோ ஒட முடியாது என்பதை உணர்ந்து விடாமுயற்சியோடு சென்று கொண்iே இருந்ததால் வென்றது!’ இது மாணாக்கரின் விளக்கம். 'நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள்?” "ஆணவம் இல்லா ஆமையைப்போல, விடாமுயற்சியுடைய ஆமையைப் போல இருக்க விரும்புகிறோம்” என்று பல வகுப்புகளிலும் பதில் கிடைத்தது. - புதிய சிந்தனை ஒருநாள், ஒரு நாட்டுப்புறப் பள்ளிக் கூட்டத்தில், மேற்கூறிய பதிலை வகுப்பு முழுதும் சொல்லி முடித்ததும் சிறுமி ஒருத்தி குறுக்கிட்டாள். =" 'அய்யா! நான் முயலின் திறனும் ஆமையின் விடாமுயற்சியும் உடையவளாக இருக்க விரும்புகிறேன்” என்று பதில் கூறினாள். ஆயிரத்தில் ஒருவர் இப்படிப் புதுவழியில் சிந்திக்கத் தொடங்கினால் நானிலம் வளம்பெறும்தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/506&oldid=788315" இலிருந்து மீள்விக்கப்பட்டது