உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 - நினைவு அலைகள் பெரியாரின் அறிவுரை - இதை எல்லாம் அறிந்த தந்தை பெரியார் - ஒருமுறை என்னைக் கண்ட போது "அருமையான வேலை செய்கிறீர்கள் “பள்ளிக்கூடத்தை நினைத்துக்கூடப் பார்க்காதவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் மகிழ்ச்சியோடு படிக்கிறார்கள் “எங்குப் பார்த்தாலும் எழுச்சியும் நம்பிக்கையுமே இருந்தாலும் 'அய்யாவுக்கு ஒன்று தெரிந்திருக்க வேண்டும். 'பல அரசியல் வட்டாரங்களிலும் உங்கள்மேல் பொறாமை வளர்ந்து வருகிறது” என்று கூறினார். 'அய்யா! நான் என் நடவடிக்கையில் எதையாவது திருத்திக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள வேண்டுமா?’ என்று பணிவோடு கேட்டேன். “என்ன தப்பு இருக்கிறது மாற்றிக் கொள்ள ஒரே வழி - ஒரு வேலையும் செய்யாமல், பெரியவர்களைக் காக்காய் பிடிப்பதோடு நின்று விடுவதுதான். “எந்தப் பொருளுக்கும் விலை உண்டு. “பொது நலனுக்கான காரியங்களைச் செய்பவர்கள், பொறாமை என்னும் பாதிப்பால் தாக்கப்படுவதே அவர்கள் கொடுக்கும் விலை. 'அதற்காகச் செய்கிற நல்ல காரியங்களை விட்டுவிட வேண்டுமா? தொடர்ந்து செய்யுங்கள்” என்று அறிவுரை கூறினார். அதைப் பின்பற்றினேன். 48. திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார் தந்தையின் பார்வைக்கு 1951 ஏப்ரல்லில் புது டில்லியில் குடியரசுத் தலைவரிடம் நேரில் பெற்ற பத்மபூரீ என்ற விருதை எங்கள் ஊரிலிருந்த என் தந்தைக்கும் என் தாய் மாமன் திரு. நெ. கோ. சுந்தரசேகரன் அவர்களுக்கும் காட்டிவிட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். - 30-7-1967 வரை நேரம் கிடைக்க வில்லை, அலுவல் பற்றிய வேலை அவ்வளவு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/511&oldid=788321" இலிருந்து மீள்விக்கப்பட்டது