பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார் 477 'திடீர் திடீர் என்று நெஞ்சில் ஒர் இடி மனக்கண் எதிரில் ஒரு பின்னல்! ‘தொடர்ந்து பல நாள்கள் ஒரே சோர்வு! நடைப்பினம்! ‘நான் மேலும் இருக்க வேண்டிய ஆண்டுகளோ, மாதங்களோ, அல்லது நாள்களோ, நாட்டுக்குப் பயன்படுமா? 'காலம் என்பதுதான் விடை தரவேண்டும்!’ என்ற அவரது எழுத்தில் எத்தனை வேதனை! காலம் அந்த நிலைக்கு என்னையும் தள்ளும் என்று நான் கனவு கூடக் காணவில்லை. காமராசரின் செய்தி திருமதி. குஞ்சிதம் குருசாமி நினைவு மலருக்கு முதலமைச்சர் மாண்புமிகு கு. காமராசர் அனுப்பிய செய்தியில், 'பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் சுயமரியாதைத் தம்பதிகளாகப் பெரியார் அவர்களோடு குருசாமியும் குஞ்சிதம் அம்மையாரும் இணைந்து பணியாற்றியவர்கள். "புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் உழைத்த குஞ்சிதம் அம்மையார் விட்டுச் சென்றதை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதுவே நாம் அம்மையாருக்குச் செய்யும் சமூகத் தொண்டாகும்’ என்று திசை காட்டினார். என். வி. நாயுடு குஞ்சிதம் அம்மையாரைப் பற்றி திரு.என். வி.நாயுடு எழுதியது: பல்லாண்டுகளுக்குப் பிறகு சம்பந்தியான அறிஞர் அவர். ‘மகளாக, மனைவியாக, தாயாக, தோழியாக, எந்நிலையில் வைத்துக் கண்ட போதிலும் அவருடைய பெண்மையின் பெருமை மனக்கண்முன் நிற்கும். 'தன் துயர் அறியாது பிறர் எவ்வம் அறியும் பெண்மை. "இப் பண்புகள் ஒவ்வொன்றினுக்கும் சான்றாக வாழ்ந்தவர் குஞ்சிதம் அம்மையார்’ என்று துல்லியமாக எடை போட்டுக் காட்டினார். "மனம், வாழ்க்கை, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்த சமுதாய அமைப்புக்காகப் பாடுபட்ட அந்த வீரப் பெண்மணி-திருமதி குஞ்சிதம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/516&oldid=788326" இலிருந்து மீள்விக்கப்பட்டது