பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475 நினைவு அலைகள் ‘குஞ்சிதம் அம்மாள் சுயமரியாதை இயக்கமே முக்கியமெனக் கொண்டு இருந்தவர்கள். 'அடுத்தாற்போல் அவரைப் போல் இயக்கத்துக்கு யார் இருக்கிறார்கள்? ‘குஞ்சிதம் அம்மாளுக்கு இரு மாணிக்கங்கள் போன்ற குழந்தைகள். 'மகள் ரஷ்யா, மகன் கவுதமன், துப்பாக்கியில் பிறந்த பீரங்கி என்பார்களே அதுபோல. 'நம் கொள்கையில், இயக்கத்தில் உணர்ச்சி கொண்டவர்கள். ‘இவர்கள் நாட்டுத் தொண்டில் ஈடுபட்டுத்துக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்” - என்று நல்லுரை கூறித் தேற்ற முயன்றார். குருசாமிக்கு அறிவுரை பெரியார் மேற்படி கட்டுரையில் பயனில்லை என்று அறிந்த பிறகும், துக்கப்பட்டுக் கொண்டிருப்பது நேரத்தைக் கொலை செய்வதாகும். 'மறக்க முடியாத துக்கமாயினும் இயற்கையின் வேகத்தைச் சமாளிக்கத் தைரியம் வேண்டும்’ என்று திரு. குருசாமிக்கு அறிவுரை கூறியிருந்தார். குருசாமியின் கவலை நினைவு மலரில் வேதனை மிக்க சாதனை என்ற தலைப்பில் சா. குருசாமி கவலை பொங்கும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'கடந்த முப்பத்தெட்டு ஆண்டு தொடர்பில் என் தலைவரிடம் இருந்து பல அறிவுரைகளைக் கேட்டறிந்து சிந்தித்து ஏதோ ஒரளவு பின்பற்றியும் வந்து இருக்கிறேன். 'ஆனால் இந்த ஒரே ஒரு அறிவுரை மட்டும் இன்னமும் என்னை ஆட்கொள்ளவில்லை. 'ஆகவே, இதில் அவரைப் பின்பற்றத் தகுதியற்றவன் ஆகிவிட்டேன்’ என்று எழுதியது, அவர் தமது தலைவர்பால் கொண்டு இருந்த பற்றினைப் புலப்படுத்துகிறது. வேதனையிலும் தலைமையின்பால் கொண்ட பற்றின் வெளிப்பாடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/515&oldid=788325" இலிருந்து மீள்விக்கப்பட்டது