பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார் 475 அப் பணியிலும் பெண்ணின் பெருமையையும் மேற்கூறிய நல்லியல்புகளையும் உலகறியச் செய்வதற்கு முன், பதவியேற்ற சில நாள்களிலேயே இயற்கை எய்தினார். குஞ்சிதம் அம்மையார் மறைவு தமிழக மக்களைத் துயரக் கடலில் தள்ளிவிட்டது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் கண்கலங்கி நின்றனர். அண்ணன் குருசாமி, வேதனைக் கடலில் இருந்து மீளவே இல்லை. தனிமையில் இருக்கும்போது எண்ணி எண்ணிக் கண்ணிர் வடித்து உடல் நலம் குன்றி வந்தார். அதே நேரத்தில், எப்போதையும் போன்ற சுறுசுறுப்போடு இயக்கப் பணிகளை ஆற்றி வந்தார்! திருமதி குஞ்சிதம் பற்றிப் பெரியார் அம்மையாரின் முதலாவது நினைவு நாள் 30-7-1962இல் வந்தது. அதையொட்டி மலர் ஒன்று வெளியிடப் பெற்றது. அம் மலருக்கு எழுதிய கட்டுரையில் தந்தை பெரியார், 'திருமதி குஞ்சிதம் அம்மையாரின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல; நகரவாசிகளும் சரி, தமிழகத்திலுள்ள எல்லோருடையவும் பேரிழப்பாகும். 'அவ்வளவு தூரம் குஞ்சிதம் அவர்கள் இயக்கப் பற்றுக் கொண்டு சுயமரியாதைக் கொள்கையை வாழ்க்கையில் எல்லா வற்றிலும் புகவிட்டு அதற்காகப் பாடுபட்டு வந்தார்கள். “எனக்கு அவர்கள் மகள் போன்று, அன்புக்கும் பிரியத்துக்கும் உரியவராக, அற்புதமாக நடந்து வந்தார். "அவர்கள் இயக்கக் கொள்கைகளை உயிரினும் மேலாகக் கருதியிருந்தார்கள். ‘குஞ்சிதம் சுயநலம் கொஞ்சமுமின்றி உழைத்தவர்; தொண்டின் பயனாக எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் உழைத்தவர். 'குடும்ப நலத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. = "அவர்களுடைய உழைப்புக்குத் தக்க பயனை அனுபவிக்கவும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/514&oldid=788324" இலிருந்து மீள்விக்கப்பட்டது