பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி குஞ்சிதம் குருசாமி மறைந்தார் 479 'கலப்புத் திருமணம் செய்து கொண்டு அதற்காக இன்னல் பல ஏற்றவர். H. ‘குஞ்சிதம் அம்மையார் போன்றவர்கள் சாதி வெறிக்காட்டை வெட்டி ஒழுங்குபடுத்திய நிலத்தில் இன்று பலரும் சாதி ஒழிப்புச் சடுகுடு விளையாடுகிறார்கள். ‘சமுதாயப் புரட்சிக்கு அமைதியான தொண்டாற்றியதைப் போன்று, ஏழை என்றும் அடிமையென்றும் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலைக்கும் அடிகோலி, அமைதியாகப் பணியாற்றியவர் திருமதி குஞ்சிதம். "நாட்டைப் பற்றிப் பேசுகிறவர்கள் பலர், வீட்டுப் பணிக்குப் பிறரை எதிர்பார்ப்பது அன்றாட நிகழ்ச்சி. 'பட்டம் பெற்ற காளையரே, வீட்டிற்கு உதவியாக இருப்பது வெட்கமென்று நினைக்கிற கோணல் காலம் இது. 'பட்டம் பெற்ற பெண்கள், கொலுப் பொம்மைகளாக இருக்க, அவர்களும் மற்றவர்களும் விரும்பிய காலம் அன்று. 'அப்போது பட்டம் பெற்ற குஞ்சிதம் அம்மையார் வீட்டுப் பணிகள் அத்தனையையும் ஏற்றுச் சுணங்காமல் செய்வார். "ஆசிரியையாகச் சேர்ந்து, சென்னை நகராட்சிக் கல்வி அதிகாரியாக உயர்ந்த அம்மையார், கடமையிலே விழிப்பும் நேர்மையிலே உறுதியும் நோக்கிலே சமனும் உடையவர். அஞ்சா நெஞ்சினர். 'பெற்றோருக்கு நன்மகளாக, கணவருக்கு நல் வாழ்க்கைத் துணையாக, குழந்தைகளுக்குச் சிறந்த தாயாக, புகழ் தேடாத சமுதாயத் தொண்டராக, ‘பொதுத் துறை அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக, புதுமைப் பெண் குலத்திற்கு முன்னோடியாக, சமூக பொருளா தாரத்துறை மாறுதல்களுக்கு அடிகோலிய வீரர் படையினராக, 'தன்னலத்திற்காகக் கொள்கையை விட்டுக் கொடுக்காத இலட்சிய வாழ்வு வாழ்ந்து காட்டியவர் திருமதி குஞ்சிதம் குருசாமி அம்மையார். “பகட்டுக் காலத்திலே, இலட்சியவாதி விடிவெள்ளி! "அந்த விடிவெள்ளி திருமதி குஞ்சிதம் குருசாமி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/518&oldid=788328" இலிருந்து மீள்விக்கப்பட்டது