உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48t) 49. சோவியத் நாட்டில் விரைவான கல்வி வளர்ச்சி சோவியத் பயணம் அழைப்பு வந்தது! சோவியத் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு வந்தது! சோவியத் இந்தியப் பண்பாடு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் மூன்று கல்வியாளர் அடங்கிய துாதுக் குழு ஒன்றை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு 1961இல் அழைப்பு வந்தது. இந்திய அரசு தூதுக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்து எடுத்தது. இந்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளராய் இருந்த திரு. ராஜாராய்சிங், பஞ்சாப் மாநிலப் பொதுக் கல்வி இயக்குநராய் இருந்த, செல்வி சரளாகண்ணா, சென்னை மாநிலப் பொதுக் கல்வி மற்றும் பொது நூலக இயக்குநராகிய நான் ஆகிய மூவரை இந்திய அரசு அக் குழுவில் சேர்த்தது. # என்னை அக் குழுவில் அனுப்பி வைக்குமாறு சென்னை மாநில அரசுக்கு கடிதம் எழுதிற்று. மாநில அரசு தன் இசைவைத் தெரிவித்துப் பதில் எழுதிவிட்டு அதன் படியை எனக்கு அனுப்பிற்று. நானும் சோவியத் நாடு சென்று வர ஒப்புக் கொண்டேன். இந்தியக் கல்வி அமைச்சகம் சோவியத் துரதரகத்தோடு தொடர்பு கொண்டு பயண ஏற்பாடுகளை செம்மையாகச் செய்து வைத்திருந்தது. குறிப்பிட்ட நாளன்று புது தில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மூவரும் பயணமானோம். முதல் வகுப்பில் பயணம் செய்ததால் மிக வசதியாக இருந்தது. கல்வி வளர்ச்சி நாங்கள் முதலில் டாஷ்கண்டில் இறங்கி நான்கு நாள்கள் தங்கி இருந்தோம் === __ நாங்கள் சென்றது. செப்டம்பர் திங்களில்; வளர்பிறை பருவத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/519&oldid=788329" இலிருந்து மீள்விக்கப்பட்டது