பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் நாட்டில் விரைவான கல்வி வளர்ச்சி 481 எனவே, இளந்தென்றலில் நல்ல நிலா ஒளியில் எங்கள் விருப்பம் போல் நடந்து வர முடிந்தது. மேற்கு நாடுகளில் இரவு சாப்பாடு ஆறரை மணி அளவில் தொடங்கி விடும். நாங்கள், பொழுதோடு உண்டுவிட்டுப் பொழுது போக்கு வதற்காகத் தெருக்களைச் சுற்றி வந்தோம். எங்களைப் போலவே பலரும் சுற்றி வரக் கண்டோம். எவர் முகத்திலும் கவலைக் குறியைக் காணவில்லை. அச்சம் தென்படவில்லை. எல்லார் முகங்களிலும் நிறைவு, ஒளி விட்டது. பேச்சில் கலகலப்பு இருந்தது. ஏறத்தாழ இரவு எட்டு மணி இருக்கும். ஒரு கட்டடத்தில் முப்பது முப்பத்தைந்து நடுத்தர வயதுப் பெண்கள் ஏதோ கற்றுக் கொண்டிருந்தார்கள். வழிப் போக்கர்களை விசாரித்ததில், அவர்கள் ஜெர்மன் மொழி கற்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஏற்கெனவே தாய்மொழியும், ரஷ்ய மொழியும் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் என்கிற தகவலையும் சொன்னார்கள். சோவியத் நாட்டில் நாங்கள் கண்டதையும், கேட்டதையும் விரிவான அறிக்கையாக இந்திய அரசுக்குக் கொடுத்தோம். அது, முந்நூற்றைம்பது பக்கங்களுக்கு மேற்பட்ட நூலாக வெளி வந்து உள்ளது. அதில் பாலர் கல்வி முதல், பல்கலைக் கழகக் கல்விவரை தொழிற் பயிற்சி உள்பட விவரித்துள்ளோம். பொதுக் கல்வியிலேயே தொழிற் பயிற்சியையும் சேர்த்திருப்பது சோவியத் கல்வி முறையின் சிறப்பாகும். அதை எப்படிச் செய்திருக்கிறார்கள்? கீழ் வகுப்புகளில் விளையாட்டு கைவினைகள் கற்பிக்கப் படுகின்றன. வகுப்பு ஏற ஏற, கை வேலை, வெகு மெல்ல மெல்ல, நுட்பமும் கடினமும் ஆகிறது. கடைசி ஈராண்டுகளில் மொத்தப் பள்ளி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை பணிப் பயிற்சியில் செலவிடுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/520&oldid=788331" இலிருந்து மீள்விக்கப்பட்டது