பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 நினைவு அலைகள் ஆசிரியரிடம் கொடுத்து மகிழும். ஆசிரியருக்கும் மூத்தோர்களுக்கும் உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதைச் சோவியத் பிள்ளைகள் கற்றுக் கொள்ளு கின்றார்கள். ஒராசிரியர் தொடக்கப் பள்ளியாயினும், ஒரு நல்ல நூல் நிலையம் இருக்கும். - நூலகம் பாதுகாப்பகமாக இல்லாமல், பயன்படும் கருவூலமாக உள்ளது. அய்ந்தாவது, ஆறாவது வகுப்புகளில் படிப்போர் ஆண்டுக்குச் சராசரி ஆறு ஏழு நூல்களாவது படிக்கக் கண்டோம். ஆண்டுதோறும் அய்யாயிரம் சிறுவர் நூல்கள் சோவியத் நாட்டில் சிறுவர்களுக்கு ஏற்ற அய்யாயிரம் புதிய நூல்கள் ஆண்டு தோறும் வெளியாகின்றன. வரையறுக்கப்பட்ட பாடத் திட்டங்களில் உள்ளவற்றை எல்லா மாணவ மணிகளும் பயில வேண்டும். i அதனோடு மகிழ்ச்சியூட்டும் விருப்பப் பயிற்சிகள் ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும். எவரும் இரண்டுக்கு மேற்பட்ட “புறப் பாடங்களில் ஈடுபடக் அடடாது. ஆர்வத்திற்கேற்ற துறை மாணாக்கருக்கு எந்த எந்தத் துறையில் தனி ஆர்வம் இருக்கிறதோ, அவ்வத் துறையில் முன்னேற வசதிகளும் வழிகாட்டலும் செய்து வைத்திருக்கிறார்கள். “கீவ் நகரத்தில், வேளாண்மையில் ஆர்வமுள்ள மாணாக்கர் களுக்காக ஐம்பது ஏக்கர் பண்ணை ஒன்றை ஒதுக்கி வைத்து இருந்தார்கள் விருப்பம் உள்ள மாணாக்கர், கால அட்டவணைப்படி, அங்குச் சென்று, ஆய்வு நடத்திப் பத்துப் புது வகையான ஆப்பிள் பழங்களை உற்பத்தி செய்து இருப்பதை நேரில் கண்டு, உண்டு, மகிழ்ந்தோம். அம் மாணவர்கள் எந் நிலையினர்? உயர்நிலைப் பள்ளியில் படிப்போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/527&oldid=788338" இலிருந்து மீள்விக்கப்பட்டது