உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் நாட்டில் விரைவான கல்வி வளர்ச்சி 489 வளர்ச்சிக்கான வழிகள் சோவியத் நாட்டில், எல்லா ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேவை. பள்ளியிறுதி முடித்தபின், குறைந்தது இரண்டாண்டாகிலும் ஆசிரியர் பயிற்சி வேண்டும். அந் நாட்டில் வேலையை ஒழுங்காகச் செய்யும் வரையில் எல்லார்க்கும் பணிப் பாதுகாப்பு உண்டு. தொழில் கல்வி மேம்பாட்டுக்கும் பயிற்சி உயர்வுக்கும் வாய்ப்புகளுண்டு. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே, பாலர் பள்ளி ஆசிரியையாகத் தொடங்கிப் பல்கலைக் கழக ஆசிரியராக உயர்ந்தவர் பலராவர். ஆசிரியத் தொழிலுக்கும் அதே தகுதியுடைய பிற அலுவலர்க்கும் ஊதியத்தில் அதிக ஏற்றத்தாழ்வு இல்லை. எல்லாப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகள். எல்லாப் பள்ளி களிலும் குடிமைப் பயிற்சி உண்டு. எந்தப் பள்ளியிலும் மதபோதனை கிடையாது. ஒவ்வோர் பள்ளியிலும் பெற்றோர் சங்கமுண்டு. அது நிதி திரட்டுவதற்காக அல்ல. கல்வி முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் கல்விக் கொள்கை திட்டங்கள் பற்றிக் கருத்து கேட்கும்போது கலந்து ஆலோசித்து எடுத்துரைக்கவும் பயன்படுகிறது. அந் நாட்டில் பெயரளவில் ஏட்டில் மட்டுமிருக்கும் பெற்றோர் சங்கமில்லை. சோவியத் நாடு பதினைத்து குடியரசுகளின் இணைப்பாகும். ஒவ்வொன்றுக்கும் தனிக் கல்வி அமைச்சகம் உண்டு தேசிய வரம்புக்குள் ஒவ்வோர் குடியரசும் அதன் பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளும். எடுத்துக் காட்டாகப் பள்ளிக் காலம் பதினோராண்டு என்பதே தேசிய வரம்பு ஆகும். மும்மொழித் قبات لكي பாடமொழி மாணவனின் தாய்மொழியாக இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/528&oldid=788339" இலிருந்து மீள்விக்கப்பட்டது